சமூகம் பிராந்திய செய்திகள்

கரையொதுங்கும் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் ; புத்தளம் மக்கள் அச்சத்தில்

Written by Web Writer

 

ஆபத்தான இந்திய மருத்துவ கழிவுகள், ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி போத்தல்கள், ஊசி வகைகள், காலாவதியான மருந்துகள்
போன்ற மருத்துவ கழிவுகள் கடந்த சில நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் கரையொதுங்கி வருகின்றன.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு தொடக்கம் – தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீற்றர் வரையான கடற்கரையில் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கியுள்ள கழிவுப் பொருட்களில் இந்திய முகவரி பொறிக்கப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது.

இவ்வாறு கரையொதுங்கும் கழிவுப்பொருட்களினால் ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் மீனவர்களிடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கடலில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் இவ்வாறு கரையொதுங்குகின்றனவா என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது குறித்து கரையோரத்தில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

About the author

Web Writer

Leave a Comment