Youth உள்நாட்டு செய்திகள் கல்வி சமூகம்

மாணவர் ஆலோசனைப் பணிகளுக்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளல்

Written by Web Writer

பாடசாலை மாணவர் ஆலோசனைப் பணிகளுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளல்.

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர் ஆலோசனைப் பணிகளுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3 தரத்திற்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்வதற்காக தகைமை கொண்ட ஆண்/ பெண் இரு தரப்பினர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

* 2000.08.23 ஆந் அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1983.08.23 திகதியன்று அதற்குப் பின்னர்
பிறந்த தினத்தை கொண்டுள்ளோர் மாத்திரம் இதற்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுள்ளனர்.

வயதெல்லை .- 2018.08.23 ஆந் தினமன்று வயது
குறைந்தபட்ச வயதெல்லை : 18 வயது
உயர்ந்தபட்ச வயதெல்லை : 35 வயது

* கல்வித் தகைமை .- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
வழங்கும் நிறுவனத்தினால் பெற்றுக் கொண்ட மனோவியல்/சமூகவியல் தொடர்பான
விசேட பட்டம்.

அல்லது

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
வழங்கும் நிறுவனத்தினால் பெற்றுக் கொண்ட மனோவியல்ஃசமூகவியல் பாடத்தை
பிரதான பாடங்களாக தொடர்ந்துள்ள பொதுப் பட்டம்.

அல்லது

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
வழங்கும் நிறுவனத்தினால் பெற்றுக் கொண்ட எந்தவொரு பட்டமும்.

அதனுடன்

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
வழங்கும் நிறுவனத்தினால் அல்லது மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக் கொண்ட ஒரு வருடத்தை விடக்
குறையாத ஆலோசனை தொடர்பான டிப்ளோமாப் பாடநெறி.

அல்லது

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
வழங்கும் நிறுவனம் ஒன்றினால் பெற்றுக் கொண்ட ஆலோசனை தொடர்பான ஒரு
வருடத்தை விடக் குறையாத பட்டப்பின் பட்ட டிப்ளோமா.

* பாட விதானம் .-
எழுத்து மூலப் பரீட்சை – நுண்ணறிவுப் பரீட்சை -நேரம் 01 மணித்தியாலம் (100 புள்ளிகள்)
இது பல்தேர்வு மற்றும் சுருக்கமாக விடையளிக்கக்கூடிய 50 கேள்விகளைக் கொண்டதாகும்.

பொது அறிவு – நேரம் 01 மணித்தியாலம் (100 புள்ளிகள்) பல்தேர்வு மற்றும் சுருக்கமாக விடையளிக்கக்கூடிய வகையில் 50 கேள்விகளைக் கொண்டமைந்திருக்கும்.

பொதுவான நேர்முகப் பரீட்சை.- பொதுவான நேர்முகப் பரீட்சைக்குப் புள்ளிகள்
வழங்கப்படமாட்டாது.

பிரயோகப் பரீட்சை .- பிரயோகப் பரீட்சையாக விண்ணப்பதாரியினால் இனங்காணப்பட்ட
தலைப்பின் கீழ் சமர்ப்பிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக 05 நிமிடங்களை
விடக் குறையாத நேரம் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 26.07.2018 அரச வர்த்தமானியினை பார்வையிடவும்.

About the author

Web Writer

Leave a Comment