பலஸ்தீன

காஸா மீதான குண்டுத் தாக்குதலில் அமீரக விமானியும் இணைந்துகொண்டார்

Written by Administrator

மூன்று வாரங்களுக்கு முன்பாக காஸா மீது இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அறபு அமீரகத்தின் விமானி ஒருவரும் பங்குகொண்டிருந்தார் என இஸ்ரேலியப் பத்திரிகையாளர் எடிகொஹென் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய ஊ-35 போர் விமானத்தில் அமீரக விமானி ஒருவர் பயணித்துள்ளார்.

இஸ்ரேலின் குறிப்பிட்ட பத்திரிகையாளர் இது தொடர்பில் டுபாயின் பொதுப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறை பிரதித் தலைவர் ஜெனரல் தகீ ஹல்பானுக்கு விடுத்துள்ள அறைகூவலில், முடியுமென்றால் தனது இக்கருத்தை மறுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய விமானப் படையில் அமீரக விமானிகளும் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். அறபு நாடுகளை அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்பதைத் தெரிந்து கொண்டே அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் 2010 இல் டுபாயில் இடம்பெற்ற ஹமாஸ் தலைவர் மஹ்மூத் மப்ஹூஹை படுகொலை செய்தவரும் டுபாய் பாதுகாப்புத் தலைவர் கல்பானே என்றும் இஸ்ரேலிய பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment