இலக்கியம்

அல் கைதா அல் ஜிஹாத் | வாசகர் கருத்து

Written by Administrator

கடந்த மீள்பார்வையில் மேற்படி தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பாளர் சம்பிக்கவின் கருத்து பற்றி குறிப்பிட்டிருந்தது.

சிங்கள சினிமாவை எடுத்துக் கொண்டால், அவற்றில் உள்ள முக்கால்வாசிப் பாடல்களும் ஹிந்திப் பாடல் வெட்டிலோ, தமிழ் பாடல்கள் மெட்டிலோதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. சங்கீதம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, ஹிந்தியோ, தமிழோ என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அவர்களது கருத்து. இது நல்ல விஷயம்தான் இதனால் சாதி, மதம் பாராமல் கலைஞர்களிடம் பரஸ்பரம் வளர்ந்துள்ளது. கோப்பிகடே நாடகத்தில் டில்சி மஹத்தயா போடும் ஹூ… ஹூ… சத்தம் கூட ஒரு ஹிந்தி பாடலில் வரும் சத்தத்தின் சாயலாகும். அதேபோல விஷாரத று.னு அமரதேவ அவர்களின் பாடல் இசை முஸ்லிம்களின் உருது “கவாலி” மெட்டில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக காணலாம். இதனால் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. ஒற்றுமையும் வளர்ந்துள்ளதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய விஷயமாகும்.

பிற சமூக கலாச்சாரங்களை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கலைஞர்கள் இவ்வாறு செய்து புகழ் பெறுகின்றனர். யாருக்கு எந்தெந்தத் துறைகளில் புலமைத்துவம் இருக்கிறதோ அந்தந்த துறைகளை எடுத்துக் காட்டி புகழ் பெற நினைப்பது தவறான செயல் அல்ல. ஆனால், அதன் அசல் வடிவத்தை சிதைத்து குறுக்கு வழியில் புகழ்தேட நினைப்பது நல்ல விடயமல்ல.

இங்கே அல் கைதா – அல் ஜிஹாத் என்ற நூலை குறுக்கு வழியில் புகழ் தேடும் ஒரு செயல்பாட்டில் எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது. அல் ஜிஹாத் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் புனிதத்துவத்தை கெடுக்கும் வகையில் எல்லாம் தெரிந்தவர்கள் போல மேதாவித்தனம் காட்ட முனைந்திருக்கும் செயல்பாடு தெரிகிறது.

பாமரர்கள் மத்தியில் தூய்மையான அறபுச் சொற்களை, பயங்காரவாதச் சொற்களாக எடுத்துக்காட்டி சுயலாம் தேட முனைந்திருப்பதன் நோக்கம் நல்லதைச் சொல்லி உண்மையைச் சொல்லி செல்வாக்குத் தேட முனையாமை என்பதினாலாகும்.

நாட்டுக்கு நாடுகள் செய்யும் உதவிகளில், அறபு நாடுகள் செய்யும் உதவிகளை மாத்திரம் இவர் பாஷையில் அடிப்படைவாதம் என்கிறார். அப்படிசெயன்றால், ஈரான், பாகிஸ்தான், ஈராக், சவூதி மற்றும் அறபு நாடுகள் எல்லாம் யுத்த காலத்தில் செய்த உதவிகள், சுனாமிக்கு செய்த உதவிகள்யாவும் அடிப்படை வாத உதவிகளா? உண்மையில் இந்த உதவிகளை யார் அனுபவித்தார்கள் என்று நேர்மையாக சிந்தித்து பார்ப்பது அவசியம்.

சுனாமியின் பேரால் துருக்கி வீட்டுத் திட்டம் வெலிகமையில் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க பெரும்பான்மை சகோதரர்களுக்கே வழங்கப்பட்டது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சவூதி அமைத்த முஸ்லிம்களுக்கான நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை முஸ்லிம்களுக்கு வழங்காமல் வழக்கு போட்டு வெட்கமில்லாமல் தடுத்து நிறுத்தியது யார்? என்பதை எல்லோரும் அறிவர். உண்மையில் சிந்தியுங்கள். யாருடைய அடிப்படைவாதம் இங்கே வென்றிருக்கிறது.

பயங்காரவாதத்தின் ஆணி வேராக சவூதி ரியால்கள் இருக்கிறது என்று இவர் கண்டுபிடித்திருக்கிறார் போலும், அவ்வாறானால் சவூதியில் தொழில் புரியும் இலங்கையர்கள் பற்றி இவர் என்ன நினைக்கிறார்.?

சம்பிக்க சிந்தனைகளைப் படிக்கும் போது மேற்குலகை காப்பாற்றி, அறபு நாடுகள், முஸ்லிம் அறிஞர்களை விமர்சித்து பேர் வாங்க நினைக்கும் ஒரு அற்பச் செயலாகவே கருத முடிகிறது. மேற்குலக பணத்திற்கு அடிமையாகிய, அறபு நாட்டு உதவிகளை உதாசீனம் செய்வதே பிரதான நோக்கமாகக் தெரிகிறது.

இன்றைய கால கட்டத்தில் பெரம்பான்மை சமூக மத்தியில் நல்ல செயற்பாடுகள் கலைகட்டி வருகின்றன. இவை முஸ்லிம்களின் செயற்பாடுகள் போல, ஒரு வித ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிம்கள் கந்தூரி கொடுப்பது அருகி வரும் இந்தக் கட்டத்தில், பெரமு பான்மை “தன்சல்” மூலம் நல்ல செயற்பாட்டை முன்னெடுக்கின்றன. முஸ்லிம்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும்போதும் விடை பெறும் போதும் ஸலாம் சொல்லிக் கொள்வது போல அவர்களும் சந்திப்பிலும், விடை பெறுதலின்போதும் ஹரி கிஹில்லா என்ற என்று வெறுமனே சொன்னவர்கள், முஸ்லிம்களின் கலாச்சாரத்தைப் போல புதுசரணய் சொல்லப் பழகியிருக்கிறார்கள். இவை நல்ல மாற்றத்தின் அறிகுறிகள்.

எந்த ஒரு நல்ல விடயத்தையும் அடிப்படைவாதம் என்று பூசி விடும் சம்பிக்க போன்ற இனவாதம் பேசுவோர் கருத்து படித்தவர் மத்தியில் எடுபடப் போவதில்லை.

“அல்லாஹ் அக்பர்” என்று எல்லா முஸ்லிம்களும் பாவிக்க வேண்டியை சொற்களை பயங்கர சொல்லாக ஒன்றும் தெரியாதோர் மத்தியில் காட்ட முனையும் அவர் அறியாமையை என்னவென்பது.

அவ்வாறானால் பேச்சு வழக்கில் பாவிக்கும் புதுசரணய்யும் இதை ஒத்ததா!

பொய்களை விற்று புகழ்தேடும் அல் கைதா அல் ஜிஹாத் ஆசிரியர் பாமரர்களை சில காலம் ஏமாற்றி பேர் வாங்கலாம், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. மக்கள் அறிவைத் தேடி நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில், போலிகளை விற்று ஏமாற்ற முடியாது என்பது திண்ணம்.

 – ஹாபிஷ் தௌபீக், வெலிகாமம்     

About the author

Administrator

Leave a Comment