அரசியல்

எல்லை நிர்ணய அறிக்கை: ஒக்.28 க்குப் பின் மீண்டும்

Written by Administrator

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு இரண்டினாலும் தோற்கடிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை மீளவும் ஆராய்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினர், தமது அறிக்கையை முன்வைப்பதற்கு 02 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழுவில் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, கலாநிதி ஏ.எஸ்.எம்.நவுபல் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

2017 இன் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் 4(12) ஆம் இலக்க ஷரத்துக்கு இயைந்ததாக இந்த நியமனம் சபாநாயகரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் செயற்பாடுகள் இம்மாதம் 28 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணம், அதிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அடுத்து வரும் இரு மாதங்களுக்குள் (ஒக். 28) சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது இவர்களது பணியாகும்.

இந்த அறிக்கை ஒக். 28 ஆம் திகதி பிரதமரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும். அதனை ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிட வேண்டும். மீண்டும் இது பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை.

About the author

Administrator

Leave a Comment