அரசியல் உள்நாட்டு செய்திகள் சமூகம்

இலங்கை வானொலியில் நாளை பாக்கீர் மாகார் நினைவுப் பேருரைகள்

Written by Web Writer

முன்னாள் சபாநாயகர் எம்.ஏ.பாக்கீர் மாகாரின் 22ஆவது நினைவு தினம் நாளை திங்கட்கிழமை இடம்பெறுகின்றது. இதனையிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாளை நினைவுப் பேருரைகள் இடம்பெறவுள்ளன.

நாளை காலை 11.30 மணிக்கு நீதி சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோளர சிங்கள மொழியிலும், மாலை 5 மணிக்கு ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆங்கில மொழியிலும், இரவு 7.30 மணிக்கு சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ் தமிழ்ச்சேவையிலும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் இரவு 8.15 மணிக்கு முஸ்லிம் சேவையிலும் உரையாற்றுவர்.

About the author

Web Writer

Leave a Comment