விளையாட்டு செய்திகள்

முதலாவது ஆசிய ஆடவர் சவால் கிண்ணத் தொடர்

Written by Web Writer

கரப்பந்தாட்ட வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்துவைக்கும் வகையில் இலங்கையில் இடம்பெறும் முதலாவது ஆசிய சவால் கிண்ணத்திற்கான (Asian Challenge Cup) ஆடவர் கரப்பந்து போட்டித்தொடரின் ஆரம்ப வைபம் கடந்த சனிக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

ஆசிய கரப்பந்து சம்மேளனத்தின் வழிகாட்டலில் இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த போட்டித்தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதுடன், 08 நாடுகள் அதில் பங்குபற்றுகின்றன.

ஜனாதிபதி இதன்போது போட்டித்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டதோடு இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசல் முஸ்தபா, கரப்பந்து சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மற்றும் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

About the author

Web Writer

Leave a Comment