உலக செய்திகள்

கேலி செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறை – சவுதி அரசு அதிரடி

Written by Web Writer

சவுதி அரேபியாவில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் கடும் நடவடிக்கைக்கும் தண்டனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணையதளங்கள் வழியாக கேலி, கிண்டல் மற்றும் விமர்சனங்கள் செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.

அப்படி செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 லட்சம் ரியால்கள் அபராதமாக விதிக்கப்படும் என அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment