உலக செய்திகள் வியாபாரம்

ஜெக் மா – அலிபபா பொறுப்பை விட்டு விலகுகிறார்

Written by Web Writer

இணைய வணிகத்தில் உச்சம் தொட்ட உலகப் புகழ்பெற்ற சீனாவைச் சேர்ந்த ‘அலிபபா’ தளத்தின் தலைவர் ‘ஜெக் மா’ 2019 ஆம் ஆண்டு தமது பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள முக்கியமான ஒரு பணக்காரரான ஜெக் மா வின் பின் இந்த பொறுப்பை டேனியல் சேன் ஏற்கவுள்ளார்.

‘அலிபபா’ நிறுவனத்தின் பங்குகள் 2017 ஐ விட 2018 இல் இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு ‘அலிபபா’ நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜெக் மா ஒரு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

பதவி விலகி, தான் ‘அலிபபா’ வில் பங்குதாரராக இருந்தபடி மீண்டும் கல்வித் துறையில் பணியாற்ற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment