அரசியல் உள்நாட்டு செய்திகள்

21 ஆவது பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரை நாளை

Written by Web Writer

மர்ஹூம் பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த சொற்பொழிவு, 21 ஆவது தடவையாக வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை, தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இந் நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில் நாளை 19 ஆம் திகதி மாலை 4.45 இற்கு நடைபெறவுள்ளது.

‘சகலதும் உள்ளடங்கிய இலங்கைக்கான ஒரு பார்வை’ என்ற தலைப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய நினைவுப் பேருரையை நிகழத்தவுள்ளார். நிகழ்வில் இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்குபற்றவுள்ளனர்.

About the author

Web Writer

Leave a Comment