Features உள்நாட்டு செய்திகள் சிறப்புக்கட்டுரைகள் வியாபாரம்

நாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்காள்ளுமா?

Written by Web Writer

ரூபா மேலும் மதிப்பிறக்கத்திற்கு உள்ளாகலாம் என நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எமது தேசிய வருமானத்தில் பெரியதொரு தொகையை கடனாக செலுத்தும் நிலையில் இவை தவிர்க்க முடியாதவை .

நாடு எனக்கு என்ன செய்துள்ளது என்பதை விட நான் நாட்டிற்கு என்ன செய்துள்ளேன் என்ற மனப்பாங்கு வளர வேண்டும். சில சலுகைகளை தற்காலிகமாக விடுவதற்கும், சில தியாகங்களை செய்வதற்கும் நாட்டு மக்கள் தயாராக வேண்டும். திறந்த பொருளாதாரத்தின் மிக மோஷமான பக்கத்தை நாம் அனுபவிக்கின்றோம்.
இந்த இக்கட்டான கட்டத்தில் அரசு செய்யவேண்டிய கடமைகள் இருப்பது போலவே மக்களும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.

அரசு உடனடியாக கிராமிய மக்கள் மத்தியில் உரிய நிபுனர்களக் கொண்டு நுண்ணிய நிதியியல் (Micro Finance)மட்டும் செலவு முகாமை (Cost cutting)தொடர்பில் பயிற்சி மற்றும் அறிவூட்டல் நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
துருக்கி இவ்வாறான நெருக்கடியை சென்ற மாதம் எதிர் கொண்ட போது. அதன் உள்ளப் பொருளாதாரம் (Internal Economy)பலமாக இருந்தால் சவாலை எதிர் கொண்டது. அத்துடன் நாட்டு மக்கள் அரசிற்கு விசுவாசமாக நடந்நு தம்மிடம் இருந்த டொலர்களை அரசிற்கு வழங்கி உதவி செய்தது.
மகிந்த அணி, மைத்திரி அணி, ரணில் அணி, ஜேவிபி அணி ஆகிய எல்லா தரப்பும் தமது அரசியல் வேறுபாடுகளைக் களைந்து நாடு என்ற புள்ளியில் ஒன்றினைய வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்ய நினைக்கும் யாரையும் வரலாறு மன்னிக்காது.

எமது நிலமையை நாம் விளங்க வேண்டும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பயத்து ஈரானிடம் எண்னை (Crude Oil) வாங்குவதை அரசு நிறுத்தியுள்ளது. எமது தேயிலையை வாங்கும் முன்னனி நாடு ஈரான், எமது முக்கிய வர்த்தகப் பயிரான தேயிலை சந்தை (Tea Market)பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. புதிய சந்தைகளை தேடுவதும், இழந்த சந்தையை மீளப் பெறுவதும் அவ்வளவு இலகுவன காரியமல்ல .

மக்கள் தேவை அற்ற சகல ஆடம்பர செலவுகளையும் நிறுத்த வேண்டும், உள்நாட்டு உற்பத்திகளை உண்ண வேண்டும், கோதுமை போன்ற வெளிநாட்டு உணவுகளை இந்நெருக்கடி முடியுமட்டும் தவிர்க்க வேண்டும். “எமக்கு ட்றம்பை மாற்ற முடியாது. ஆனால் எம்மை மாற்ற முடியும்.”

அரசு பொருளாதார நிபுணர்களைக் கொண்டு உடன் முற்காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

ஒரு பொறுப்புள்ள இலங்கையனாக (Sri Lankan )ஆக இருப்போம்.

-எம்.என்.மொஹமட் (அட்டுளுகமை)

About the author

Web Writer

Leave a Comment