Features உள்நாட்டு செய்திகள் சிறப்புக்கட்டுரைகள்

ஆபத்தான இலங்கை

Written by Web Writer

இலங்கை மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி நகர்கின்றது உலக வங்கி காலநிலை மாற்றத்தால் ஏற்படும், மாற்றங்கள் தொடர்பில் மிகக் கவனம் எடுக்குமாறு இலங்கை அரசை வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கையின் சராசரி வெப்பநிலை எதிர் காலத்தில் 2°C இனால் அதிகரிக்கலாம் எனவும். பாரிய அனர்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் காபன் பாதச்சுவடை (Carbon Footprint)2015 பரிஸ் உடன்பாட்டின் படி நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியுள்ளது.

தொடர்ந்து மூன்று வருடங்களாக நாட்டின் பல பகுதிகள் தொடரான வெள்ளப் பெருக்கையும் வரட்சியையும் எதிர்கொண்டு வருகின்றது. இம் முறை தென்மேல் பருவக்காற்று மூலம் போதுமான அளவு மழை கிடைக்கவில்லை. நாட்டின் கடலின் வெப்பநிலை 32 °C ஐ விட அதிகமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. தென்மேல் பருவக்காற்று (South west monsoons) காலத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகும் என எதிர்பார்க்ப்பட்டாலும் ஒன்று கூட உருவாகவில்லை, மாறாக வங்காள விரிகுடாவில், அரேபியக் கடலில் ஏற்பட்ட சில தாழ்அமுக்கங்கள் இந்தியாவின் சில மாநிலங்களைப் (கேரளா)பாதித்தது.
இன்னும் சில நாட்களில் வட கீழ்பருவக்காற்று ஆரம்பமாகவுள்ளது.
கடலின் வெப்பநிலை இவ்வளவு உயர்வாக உள்ள போது வரப்போகும் இந்தக் காலநிலை மாற்றம் மிக, மிக ஆபத்தானது. ஏனெனில் பலமான சூறாவளிகள் உருவாவதற்கான நிறைய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை உயர்வாக உள்ள போது உருவாகும் சூறாவளி பலமானது பருமன் கூடியது. அண்மையில் அமெரிக்காவையும், பிலிப்பேனையும் தாக்கிய சூறாவளி 500Km விட பருமன் கூடியது, இவ்வாறான பலமான காற்று இலங்கையை தாக்கினால் என்ன செய்வது நினைத்துக் கூட பார்கமுடியாது.
நாடு இவ்வாறான ஒரு அனர்த்த்தை எதிர் கொண்டால் எமது பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிகக் கூடியது. எனவே அரசு உலக வங்கியின் அறிக்கையை கூடுதல் அக்கறையுடன் கவனம் எடுத்து செயற்பட வேண்டும்.

-எம்.என்.மொஹமட் –  பேருவளை

About the author

Web Writer

Leave a Comment