உள்நாட்டு செய்திகள் கல்வி சமூகம்

மௌலவி ஆசிரியர் நியமன வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு

Written by Web Writer

மௌலவி ஆசிரியர் நியமன வயதெல்லையை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளமை தொடர்பில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சகலரையும் விழித்து நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு , கல்வி அமைச்சினால் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. என்றாலும், இந்த நியமனங்களின் வயதெல்லை 35 ஆகக் காணப்பட்டது. இந்நிலையில் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகள் கல்வி அமைச்சரிடம் இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இதன் பின்னணியில், குறித்த வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க, கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடவுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment