Features அரசியல்

நல்லாட்சியில் அதிகரிக்கும் அமெரிக்க இஸ்ரேலிய செல்வாக்கு

Written by Administrator

 – அபூ ஆகிப் –

வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு பாதுகாப்புத் துறையின் 2019 ஆம் ஆண் டுக்கான பதீட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழத்திட்டுள்ளார். அமெரிக்காவின் வரரலாற்றில் எதிர்வரும் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவீனமே முன்னொருபோதும் இல்லாத அளவு மிக உயர்வானது எனக் கருதப்படுகின்றது. இது அமெரிக்கா தனது படைப் பலத்தை மென்மேலும் வலுப் படுத்தும் நோக்கில் மட்டுமன்றி, ஆதரவு நாடுகளின் படைப் பலத்தைப் பெருக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது,

பூகோள அரசியல் நலன்களை தனது வசதிக்கேற்ப கையாண்டு வரும் அமெரிக்கா, ஏற்கனவே வருடாந்தாம் இராணுவ உதவியளிக்கும் பட்டியலொன்றைப் பராமரித்து வருகின்றது. அதில் அமெரிக்காவின் அதிகூடிய இராணுவ உதவித் தொகை பெறும் நாடாக இஸ்ரேலும், அதற்கடுத்த நிலையில் எகிப்தும் இருந்து வருகின்றன. அமெரிக்காவின் இத்தகைய இராணுவ உதவிகளைப் பெறும் நாடுகளின் பட்டியலில் இம்முறை இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளமை கவனிப்புக்குரியது.

தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் இலங்கையும் இந்தியாவும் பூகோள பிராந்திய நலன்களில் அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. 2009 முதல் 2014 வரை இலங்கை தொடர்பாக அமெரிக்கா பின்பற்றிய கொள்கை இறுக்கமானது. மஹிந்த ஆட்சி யுகத்தில் சீனா இலங்கையிலும் இலங்கையின் கடற் பரபப்பிலும் பெரும் ஆதிக்கம் பெற்றது. இன்றுவரை அவ்வாதிக்கம் தொடர்கிறது. மேற்கு நாடுகளுடன் பொதுவாகவும் அமெரிக்காவுடன் குறிப்பாகவும் மஹிந்த அரசாங்கம் பின்பற்றிய இறுக்கமான கொள்கையினால் அமெரிக்கா- இலங்கை உறவில் பாரிய ராஜந்திர உராய்வுகள் நிகழ்ந்தன. இதனால் 2009 இற்குப் பின்னர் இலங்கைக்கு நேரடியாக நிதியாதரவளிப்பதை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்திருந்தது. இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சியளிப்பதோடு அமெரிக்க உதவி சுருங்கியது.

ஆயினும் 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், குறிப்பாக ரணில் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் இறுக்க மான போக்கு தளர்த்தப்பட்டதோடு, இலங்கையில் படிப்படியாக அமெரிக்கச் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. அதில் 2015 இற்குப் பின்னர் இலங்கை கடற்படையை வலுப்படுத்தும் கடற்படை கூட்டுப் பயிற்சிகளை அமெரிக்கக் கடற்படையினர் வழங்கி வந்தனர்.

சமீபத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 62 கொமோன்டோக்கள் திரு கோணமலை கடற்பரப்பில் பலன்ஸ் ஸ்டைல் -2018 என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்கக் கடற்படை உயர் அதிகாரிகள் வழங்கிய பயிற்சியில் கலந்துகொண்டனர்.

போருக்குப் பிந்திய இலங்கை அமெரிக்காவுக்கு இரண்டு வகையில் முக்கியமாகின்றது. நேரடியாக இலங்கையின் இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் அமெரிக்கா அகலக் கால் பதிக்க விரும்புகின்றது. அதேபோன்று இந்தோ-பசுபிக் கடல் பிராந்தியத்த்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கடப்படுப்படுத்த அமெரிக்கா தீவிய முயற்சிகளில் இறங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிதியொதுக்கீட்டில் மேலே குறிப்பிட்ட இரண்டாவது இலக்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடங்கியுள்ள Indo-Pacific Strategy குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்தோ பசுபிக் நாடுகளுடன் விரிவாக விவாதித்து வருகிறது.

இந்தோ பசுபிக் கடல் வலயத்தை அண்டியுள்ள அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தனது இராணுவ உதவித் தொகையை 2019 இல் அதிகரிக்கவுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற தெற்கு தென்கிழக்காசிய நாடுகளின் கடற்படை அதிகாரிகளுக்கான உச்சிமாநாட்டில் வழமையை விட 300 மில்லியன் அமெரிக்கத் தொகை மேலதிகமாக வழங்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப் பூர், பங்களாதேஷ், நேபாள், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பசுபிக் தீவுகள், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தோ-பசுபிக் மூலோபாயத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்நாடுகளோடு இரு தரப்பு மற்றும் பலதரப்பு இராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை கடந்த ஆகஸ்ட் 17 இல் அமெரிக்க ராஜாங்கப் பேச்சாளர் ஈத்தர் நோட் மேற்கொண்டிருந்தார்.

இதில் 39 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கப் போவதாக அறிவித் துள்ளது. கடல் சார் கண்காணிப்புக்கே இவ்வுதவி வழங்கப்படுவதாக பொதுவாக அறிவிக்கப்பட்டாலும், அதில் கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், அனர்த்த முகாமை, எல்லை கடந்த குற்றச்செயல்களைத் தடுத்தல், அமைதிப் படையை நிறுத்தும் ஆற்றலை வளர்த்தல் என்பன அடங்கும்.

எவ்வாறாயினும், இலங்கையின் கடற்படையை நவீன போர்ப் பயிற்சி கொண்டதும் படைக் கலன்கள் கொண்டதுமான அலகாகப் பயிற்றுவிப்பதே ஒதுக்கப்படும் நிதியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் அமெரிக்கா சார்பாக இலங்கைக் கடற்படையை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈத்தர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தனது கடலோரக் காவல் படையிலிருந்து நீக்கப்பட்ட போர்க் கப்பலொன்றையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. USCG Serman எனப்படும் இக்கப்பல் 378 அடி நீளம் கொண்டது. 1967 ஆண்டில் தயாரிக்கப்பட்டது. வியட்நாம் போரின் போது எதிரிகளின் கப்பல்களை மூழ் கடித்து வெற்றிவாகை சூடியது. கடந்த  50 ஆண்டுகள் அமெரிக்கக் கடற்படை யினரால் பயன்படுத்தப்பட்ட இக்கப்பல் தற்போது இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே அமெரிக்கா 2004 ஆம் ஆண்டு கடற்படைக்கு வழங்கிய கப்பல் இப்போதும் SLNS எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் ஆண்டிலிருந்து USCG போர்க் கப்பல்கள் இலங்கை கடற்படையினரில் பயன்பாட்டுக்கு வர வுள்ளது.

சீனாவின் செல்வாக்கை உடைத்து, ஆதிகத்தைக் குறைக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இலங்கைக்கு போர்க் கப்பலை வழங்க முன்வந்துள்ளது. இதற் குப் பதிலளித்துள்ள சீனா, தானும் இலங்கைக்கு போர்க் கப்பலை வழங்கப் போவதாக எச்சரித்துள்ளது. ஆனால், எந்தவகையான போர்க் கப்பலை அது இலங்கைக்கு வழங்கப் போவது என் பதை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்தியப் பெருங்கடலில் கட்டுப் பாட்டுக்காக மேற்குலகும் இந்தியாவும் ஒரு பக்கம் சீனா மற்றொரு பக்கம் என நடாத்துகின்ற கடல் ஆதிக்கப் போட்டி இலங்கை இழுபட்டுச் செல்கின்றது. இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டி ருந்தபோது படைக் கலன்களை விற் பதற்கு மறுப்புத் தெரிவித்த நாடுகள் தற்போது அவற்றை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளன. இது மேற்கு நாடுகள் -குறிப்பாக அதமெரிக்காவின் பூகோள பொருளாதார அரசியல் நலன் களை முன்னிறுத்தியது  என்பதில் சந் தேகமில்லை.

இலங்கையில் மென்மேலும் இரா ணுவ மயமாக்கும் செயற்பாடுகளில் மேற்கு நாடுகள் ஈடுபட்டிருப்பது இல ங்கை நலன்களுக்கு அமைவானதல்ல. இதேபோன்று 2009 இற்குப் பிந்திய ஒவ் வொரு ஆண்டிலும் சர்வதேச அல்லது தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு மாநாடொன்றுக்கு இலங்கை அனுசரணை வழங்கி வருகின்றது. கடந்த 9 ஆண்டுகளாக பாதுகாப்பு நாடு கொழு ம்பில் நடைபெறுகின்றது. இவ்வாண் டில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட் டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதில் இஸ்ரேலின் இரு இராணுவ உயர் அதிகாரிகள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளன.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு அதன் 70 ஆண்டுகால வரலாற்றில் மத்திய தரைக் கடல் பகுதியில் இஸ்ரேலிய கடற் படையினர் நடாத்திய பிரமாண்டமான கடற் பயிற்சியில் இலங்கைக் கடற்படையினரும் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பில் பாதுகாப்பு மாநாõடு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கலாநிதிக் கற்கை நெறியில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர் கமர் நிஸாம் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். பாதுகாப்பு மாநாட்டுக்கும் இந் தக் கைதுநடவடிக்கைக்கும் ஏதேனும் தொடர் உள்ளதா என்ற சந்தேகம் வலுத்து வருகின்றது. போருக்குப் பிந்திய இலங்கையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மிக லாவகமாக ஊடுருவி வருவதையே அவற்றின் இராணுவ ராஜதந்திர உறவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இன்னொரு புறம் பல்வேறு நாடு களின் போர்க் கப்பல்கள் அவ்வப்போது இலங்கைத் துறைமுகங்களை தரிசனம் செய்வது இலங்கையை சர்வதேச சக்தி கள் திட்டமிட்ட வகையில் இராணுவப் பொறியொன்றிற்குள் சிக்க வைக்க முயல்வதையே காட்டுவதாக எட்மிரல் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார். ஏனெ னில், இதுவரை இந்தியாவின் 82 பொர்க் கப்பல்களும் பாகிஸ்தான் 24 போர்க் கப்பல்களும் ஜப்பானின் 67 போர்க் கப்பல்களும் பங்களாதேஷின் 23 போர்க் கப்பல்களும் அமெரிக்காவின் 18 போர்க் கப்பல்களும் சீனாவின் 31 போர்க் கப்பல்களும் ரஷ்யாவின் 26 போர்க் கப்பல்களும் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

கொலம்பகேயின் கருத்தை வைத்து நோக்கும்போது சர்வதேச சக்திகளின் இராணுவமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அகப்பட்டு விட்டதோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இலங்கை அரசாங்கமே நினைத்தாலும் இதிலிருந்து வெளியேறி விட முடியாமல் போகும் என்பதையே எட்மிரல் கொலம்பகேயின் கருத்து உணர்த்தி நிற்கின்றது.

About the author

Administrator

Leave a Comment