உலக செய்திகள் சர்வதேசம்

இஸ்ரேல் தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்ட நாடு என்று பிரகடனப்படுத்தியுள்ளது

Written by Administrator

பலஸ்தீனின் கான் அல் அஹ்மர் பகுதியிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேறுமாறு ஒரு வார காலக்கெடுவை விதித்துள்ள இஸ்ரேல், இந்நாடு சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று அறிவித்துள்ளது.

ஒரு நாட்டின் தேசிய இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சர்வதேச சட்டமும் இஸ்ரேலினால் மதிக்கப்பட மாட்டாது என இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாஹு தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் தொடர்ச்சியாக பலஸ்தீனர்களின் நிலங்களை கபளீகரம் செய்துவரும் இஸ்ரேல் இதுவரை தனது எல்லையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. தொடக்க கால தென்னாபிரிக்கா போன்று இனவாத நாடாக விளங்கும் இஸ்ரேலின் உள்ளே வாழும் பலஸ்தீன அறபுகளுக்கு யூதர்கள் போன்று சமமான மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யும் உரிமையும் உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது. யூத இனவாதத்திற்கு ஏற்ற நீதிக் கட்டமைப்பு முறையொன்றையே இஸ்ரேல் பின்பற்றி வருகின்றது.

About the author

Administrator

Leave a Comment