உலக செய்திகள் சர்வதேசம்

சவூதியின் ஷெய்க் ஸபர் அல் ஹவாலியின் உடல் நிலை பாதிப்பு

Written by Administrator

சவூதி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ள இஸ்லாமிய அறிஞர் ஸபர் அல் ஹவாலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சவூதியில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீது சித்திரவதைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. விளைவாக, கலாநிதி ஸபர் அல் ஹவாலி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் என்பவற்றால் கலாநிதி ஸபர் அல் ஹவாலி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர் கைதுசெய்யப்பட்டு ஒரு மாத காலத்தின் பின்னர் உடல் நிலை பாதிப்படைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவரது சகோதரர் ஷெய்க் ஸஅதல்லாஹ்வின் வீட்டின் மீது முகமூடி அணிந்த இராணுவச் சிப்பாய்கள் கல் வீச்சுத் தாக்குதலை நடாத்தி விட்டு ஸஅதல்லாஹ்வையும் கைதுசெய்துள்ளனர். மட்டுமன்றி ஹவாலியின் மகன்களான அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோரையும் கைதுசெய்துள்ளனர்.

‘முஸ்லிம்களும் மேற்கத்திய நாகரிகமும்’ எனும் தலைப்பிலான நூலொன்றை ஷெய்க் அல் ஹவாலி வெளியிட்டதைத் தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நூலில் சவூதி அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்து கடும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

About the author

Administrator

Leave a Comment