உலக செய்திகள் சர்வதேசம்

மியன்மார் இராணுவம் ரோஹிங்யர்கள் மீது பரந்தளவிலான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

Written by Administrator

– அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கை

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மியன்மாரின் அரக்கான் பிரதேசத்தில் மேற்கொண்ட புலனாய்வு விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரோஹிங்ய சிறுபான்மை மக்கள் மீது கூட்டு பாலியல் வல்லுறவு, இனப்படுகொலை என பல்வேறு அக்கிரமங்களை இராணுவம் இழைத்துள்ளது என்று ராஜாங்கத் திணைக்களம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் மியன்மார் அரசாங்கத்தின் மீது மென்மேலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1000 ரோஹிங்ய அகதிகள் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2017 ஆகஸ்ட் மாதம் 7 இலட்சம் ரோஹிங்யர்கள் மியன்மாரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

“வடக்கு ரெக்கைன் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை மிக அசாதாரணமானது. அவை பெருமளவில் இடம்பெற்றுள்ளது. மக்களை பீதிக்கு உட்படுத்தி, அவர்களுக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தியது” என 20 பக்க அறிக்கை தொடர்கின்றது.

வன்முறையின் அளவைக் கவனிக்கும்போது அவை நன்கு திட்டமிடப்பட்டு இணைப்பாக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதியாகின்றது எனவும் அறிக்கை கூறுகின்றது.

2015 ஓகஸ்ட் 25 இல் மியன்மார் அரசு பாரிய இராணுவத் தாக்குதலொன்றை நடாத்தியது. ஐ.நா. சபை இதனை இனச் சுத்திகரிப்புக்கான பாடநூல் உதாரணம் என்று வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி, “மியன்மாரின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது” என்று சாடியுள்ளார்.

About the author

Administrator

Leave a Comment