உலக செய்திகள் சர்வதேசம்

பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிகழ்ந்திருக்கக் கூடாது

Written by Administrator

– யெமன் குறித்து சர்வதேச சிறுவர் பாதுகாப்பு அமையம்

கடந்த மூன்று மாத காலங்களில் 349 பொதுமக்கள் யெமனின் ஹுதைதா பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அறேபியாவின் கூட்டுப் படையினர் இப்படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் என்று “சேவ் த சில்ரண்ட்” அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் இறுதிக் கோட்டை எனக் கருதப்படும் ஹுதைதாவில் அறபு நாடுகளின் வான் கூட்டணி தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதாக சேவ் த சில்ரண்ட் அறிக்கையிட்டுள்ளது. மூன்று மாத இடைவெளியில் மொத்தமாகக் கொல்லப்பட்ட 685 பேரில் 349 பேர் ஹுதைதாவைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில் யெமனுக்கான வெளிநாட்டு இறக்குமதி இடம்பெறும் முக்கிய நுழைவாயில் நகரமாகவும் ஹுதைதாவே விளங்குகின்றது. தற்போதைய போரினால் பொதுமக்களுக்குக் கிடைக்கவேண்டிய நிவாரணப் பொருட்களும் தடைப்பட்டுள்ளதாக சேவ் த சில்ரண்ட் கவலை வெளியிட்டுள்ளது. பொதுமக்களில் அநேக குழந்தைகள் கொல்லப்படுவதாக சேவ் த சில் ரண்ட் தனது விசேட அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.

நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், யெமனில் இடம்பெறுவது குழந்தைகள் மீதான யுத்தம் தான் என்று வர்ணித்துள்ளார். விமானத் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களுமே என்றும் மருத்துவமனைகள் மீதும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது எனவும் ஹெலி தோனி எனப்படும் செவ் த சில்ரண்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment