உலக செய்திகள்

இந்தோனேஷியா பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

Written by Web Writer

இந்தோனேஷியாவில் சுனாமியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. சுலேவேசியா தீவில் நேற்று முன்தினம் 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

இப்பூகம்பத்தினால் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதையடுத்து இந்தோனேஷியாவின் பல இடங்களில் சுனாமி அலைகளும் தாக்கின. இதில், 350000 மக்கள் வசிக்கும் பாலு நகரமே அதிகம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னர், 17 ஆயிரம் பேர் பாலு நகரை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 832 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார், 500 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About the author

Web Writer

Leave a Comment