இலக்கியம் உள்நாட்டு செய்திகள்

மருதானை புகையிரத நிலையத்தில் வாசிகசாலை

Written by Web Writer

மருதானை புகையிரத நிலையத்தில் வாசிகசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. புகையிரத நிலையத்தின் பத்தாவது மேடைக்குப் பக்கத்தில் உள்ள பகுதியொன்றிலேயே இந்த வாசிக சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரதங்கள் பெரும்பாலும் தாமதமாகி வருவதனாலும் நேரகாலத்துடன் புகையிரத நிலையத்துக்கு வருவதாலும் ஒரு புகையிரதத்தைத் தவற விட்டு அடுத்த புகையிரதத்துக்காக காத்திருக்க நேர்வதாலும் புகையிரத நிலையத்தில் தரித்திருப்பவர்களின் நலன் கருதியே இந்த வாசிகசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வாசிகசாலையில் நுழைந்து வாசிப்பதோடு மட்டுமல்லாமல் இரவல் கொடுப்பதற்கான பகுதியொன்றும் இந்த வாசிகசாலையில் இயங்குகிறது.

About the author

Web Writer

Leave a Comment