உள்நாட்டு செய்திகள் கலை கல்வி சமூகம் மாணவர் பகுதி

தேசிய மீலாத் விழா – இறுதிப் போட்டிகள் 06, 07 ஆம் திகதிகளில்

Written by Web Writer

இவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் முதலிடங்களைப் பெற்றவர்களுக்கான இறுதிப் போட்டிகள் இம்மாதம் 06, 07 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன.

முதல் நாளாகிய 06 ஆம் திகதி சனிக்கிழமை , இருபாலாருக்குமான ஆரம்ப, சிரேஷ்ட பிரிவு தமிழ், சிங்கள, ஆங்கில, அரபு பேச்சுப் போட்டிகள், இருபாலாருக்குமான ஆரம்ப, சிரேஷ்ட பிரிவு கிராஅத், ஹிப்ழ் போட்டிகள், ஆரம்ப, கனிஷ்ட மற்றும் இடைநிலை பெண்கள் பிரிவுக்கான கலாசாரப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெறும்.

சகல பிரிவினருக்குமான சிங்கள, தமிழ் கட்டுரைப் போட்டிகளும், இடைநிலை மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான தமிழ் கவிதைப் போட்டிகளும், கனிஷ்ட மற்றும் இடைநிலைப் பிரிவு ஆண்களுக்கான கலாசார நிகழ்ச்சிகளும் அதே தினம் மருதானை ஸாஹிராக் கல்லூரியிலும் நடைபெறும்.

இரண்டாம் நாளாகிய 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, கனிஷ்ட மற்றும் இடைநிலைப்பிரிவின் இருபாலாருக்குமான தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு பேச்சுப் போட்டிகளும், கனிஷ்ட மற்றும் இடைநிலைப்பிரிவின் இருபாலாருக்குமான கிராஅத், ஹிப்ழ் போட்டிகளும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெறும். இடைநிலை மற்றும் சிரேஷ்ட பிரிவின் இருபாலாருக்குமான தமிழ், சிங்கள சிறுகதைப் போட்டிகளும், இடைநிலை மற்றும் சிரேஷ்ட பிரிவின் இருபாலாருக்குமான எழுத்தணிப் போட்டிகளும், சகல பிரிவினதும் இருபாலாருக்குமான ஆங்கில கட்டுரைப் போட்டிகளும், ஆரம்ப மற்றும் சிரேஷ்ட பிரிவு ஆண்களுக்கான கலாசாரப் போட்டிகளும் மருதானை ஸாஹிராக் கல்லூரியில் நடைபெறும்.

போட்டியாளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் போட்டி நடைபெறும் தினத்தில் காலை 8.00 மணிக்கு முன்பதாக போட்டி நடைபெறும் இடங்களுக்கு சமுகளித்திருத்தல் வேண்டும்.
போட்டியின் முதல் நாளான 06 ஆம் திகதி சனிக்கிழழை, 16 பாடசாலை அணிகள் கலந்து கொள்ளும் உதைபந்தாட்டப் போட்டியொன்றும் ஸாஹிராக் கல்லூரி பழைய மாணவர் தலைவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment