அரசியல் உள்நாட்டு செய்திகள் கல்வி சமூகம் பிராந்திய செய்திகள்

திஹாரியில் NFGG முயற்சியில் பொது வாசிகசாலை

Written by Web Writer

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் திஹாரிய பிரதேசத்துக்கு ஒரு வாசிகசாலை நிர்மாணித்துத் தருவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திஹாரிக்கான பொது வாசிகசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கென முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அத்தனகலை பிரதம அமைப்பாளருமான சந்திர சோம சரணலால் அறிவித்துள்ளார்.

வாசிகசாலை அமைப்பதற்குத் தேவையான காணியை வழங்கி வைப்பதற்கு ஏ.எல்.எம்.ஸுபைர் முன்வந்துள்ளார்.

அத்தனகலை பிரதேச சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரூடாக திஹாரிய மக்களின் அறிவுக்கான முக்கிய தேவை நிவர்த்தி செய்து கொடுக்கப்படவுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment