அரசியல் உள்நாட்டு செய்திகள் சமூகம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்

Written by Web Writer

போதைப் பொருள் கடத்தல் நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்க்கும் பணியில் ஈடுபடுவதற்கு இலங்கை இராணுவம் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விடயத்தில் அரசாங்கம், இராணுவத்தினரது உதவியை எதிர்பார்க்கும் பட்சத்தில் போதைப் பொருள் அற்ற சிறந்த சமூகத்தை உருவாக்க இராணுவம் தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அநுராதபுரத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

About the author

Web Writer

1 Comment

Leave a Comment