TECH Youth அறிவியல்

இதுவரை 250 செல்பி மரணங்கள்

Written by Web Writer

கடந்த ஆறு வருடங்களில் உலகம் முழுவதும் 259 மரணங்கள் செல்பியின் காரணமாக நிகழ்ந்துள்ளன என மருத்துவ விஞ்ஞானத்துக்கான அனைத்திந்திய நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

2011 ஒக்டோபர் முதல் 2017 நவம்பர் வரையான ஆறு வருட காலப்பகுதிக்குள்ளான கணக்கெடுப்பே இதுவாகும். செல்பி மரணங்களின் பிரதான காரணியாக நீரில் மூழ்குவது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ரெயில் போன்ற வாகனங்களுடன் செல்பி எடுக்க முனைவது, உயரத்திலிருந்து விழுவது, மிருகங்களால் தாக்கப்படுவது போன்றன கண்டறியப்பட்டுள்ளன.
செல்பி மரணங்கள் அதிகமாக இந்தியாவிலேயே நிகழ்ந்துள்ளன. பாகிஸ்தான், அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளும் இதில் முன்னிலை வகிக்கின்றன.

சாதாரணமாக யாரும் செல்பி எடுப்பதைப் போலல்லாமல் ஆபத்தான செல்பிகளை எடுக்க முனைவதனாலேயே மரணங்கள் நிகழ்கின்றன. அதிகமான லைக்குகளையும் செயார்களையும் பெறுவதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் அகம் பன்ஸால் தெரிவிக்கிறார்.

இந்த மரணங்களில் அதிகமானவை 10 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவிக்கிறார். பதிவிடப்படாத இன்னும் சில மரணங்களும் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இவர்கள் வாழ்க்கையை என்னவென்று இதுவரை அறியாதவர்கள். செல்பி மரணங்களைத் தவிர்ப்பதற்கு No Selfie Zone கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் செல்பி ஆபத்துக்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment