உள்நாட்டு செய்திகள் பிராந்திய செய்திகள் மாணவர் பகுதி

RVC யில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Written by Web Writer

ரமழான் விடுமுறைக்கால பயிற்சிநெறியில் பங்குபற்றிய மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் கிண்ணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று 06 ஆம் திகதி கொழும்பு ஸலாமா கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கொழும்பு சமூக அபிவிருத்திக்கான நிறுவனம்(SSD) இதனை ஏற்பாடு செய்திருந்தது.

ரமழான் மாத விடுமுறை நாட்களில் மாணவர்களை பயிற்றுவிக்கும் நோக்குடன் இலங்கை OMSED நிறுவனம் நாடளாவியரீதியில் செயற்படுத்தி வருகின்ற ஒரு மாத கால பயிற்சிநெறியே இந்த Ramadan Vocational Course (RVC). இம்முறை நாடளாவியரீதில் சுமார் 7000 மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். அந்தவகையில், கொழும்பு SSD நிறுவனம் OMSED உடன் கைகோர்த்து கொழும்பு மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருந்தது.

SSD மாணவர் பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷெய் ரபீக்குல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக, OMSED நிறுவனத்தின் உப தலைவர் அஷ்ஷெய்க் பாஸிர் (நளீமி) அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

About the author

Web Writer

Leave a Comment