உள்நாட்டு செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கையைச் சூழ மூன்று சூறாவளிகள், அனர்த்தங்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

Written by Administrator

– M.N. Mohamed –

சூறாவளி லுபான் ஒக்டோபர் 12/13 ஆம் திகதி அரேபிய வளைகுடாவை நோக்கி நகரும். இதன் தாக்கம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை இலங்கையில் காணப்படுவதால் தொடர்ந்து மழை பொழியும்.

இதேவேளை வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழ் அமுக்கம் Depression ஆக விருத்தி அடைந்து ஒக்டோபர் 12/13 ஆம் திகதி இந்தியாவின் ஒடிசா அல்லது வங்காளதேசத்தை தாக்கும் இந்த இரு தொகுதிகளிற்கு காற்று உள்ளீர்ப்பு (wind Feeding) நடைபறும் போது இலங்கையில் நல்ல மழை பொழியும். மண்சரிவுகள் கூட ஏற்படலாம்.

இதேவேளை ஒக்டோபர் 13/14 ஆம் திகதி தெற்கு அரேபியக் கடலில் உருவாகும் தாழ் அமுக்கமும் சூறாவளியாக விருத்தி அடைவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. (இதன் பாதையை இப்போதைக்கு எதிர்வு கூர்வது கடினம், மடகஸ்கார் நோக்கியும் நகரலாம்)

இந்த வகையில் இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலும் சூறாவளிகள் காணப்படுவது அவ்வளவு ஆரோக்கியமான நிலமை அல்ல. அரசும் மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பு – இந்த இரு சூறாவளியும் நேரடியாக இலங்கையை தாக்காது.

About the author

Administrator

Leave a Comment