உள்நாட்டு செய்திகள் சமூகம்

2019 புனித ஹஜ்ஜுக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

Written by Web Writer

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமைக்குச் செல்லவுள்ளோர் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தினூடாக பதிவு செய்யும் நடவடிக்கைகள், அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இலங்கையிலிருந்து மூவாயிரம் பேருக்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment