அரசியல் உள்நாட்டு செய்திகள்

இலங்கை பொலிசாருக்கு இந்தியாவில் பாதுகாப்புப் பயிற்சி

Written by Web Writer

இலங்கை பொலிசாருக்கு இந்தியாவில் பாதுகாப்புப் பயிற்சி

தொழிற்துறை பாதுகாப்பு (industrial Security) பயிற்சிக்கென இலங்கையின் 30 பொலிசார் இந்தியா சென்று வந்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் செப்டம்பர் 24 முதல் 28 வரை ஹைதராபாத்திலுள்ள தேசிய தொழில்சார் பாதுகாப்பு அகடமி (NISA) யில் நடைபெற்றுள்ளது.

NISA (National Industrial Security Academy) 1990 இல் ஆரம்பிக்கப்பட்டு தொழிற்துறை பாதுகாப்புக்கான சிறந்த நிறுவனமாகப் பேரெடுத்துள்ளது. தீவிர உட்கட்டமைப்பு பாதுகாப்புகள், வான்வழிப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றில் திறமையான ஆளணியைப் பயிற்றுவிப்பதிலும், ஆழமான அறிவும் திறமையும் கொண்டதாக உயர் அதிகாரிகளின் உடல் உள நிலைமைகளைக் கட்டி எழுப்புவதிலும் இந்நிறுவனம் பேர் பெற்று விளங்குகிறது.

5 மில்லியன் இலங்கை ரூபா மதிப்புள்ள இந்தப் பயிற்சி முகாமுக்கான மொத்த நிதியையும் இந்திய அரசே செலுத்தியிருக்கிறது. தொடர்புடைய விடயங்களுக்கு மேலதிகமாக புதிய உபகரணங்களைக் கையாளும் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது போன்ற இன்னும் பல பயிற்சிகளையும் இலங்கைப் பொலிசாரை இலக்காகக் கொண்டு இந்த வருடத்தில் நடத்தப்பட்டுள்ளன. குற்றக் காட்சி முகாமை, CCTV பகுப்பாய்வு, குற்ற விசாரணைகள்,

தடயவியல் அறிவு, சைபர் தடயவியல், பிரமுகர் பாதுகாப்பு, போக்குவரத்து முகாமை, நிதி மோசடி பற்றியெல்லாம் இலங்கைப் பொலிசாருக்கு இந்திய அரசாங்கத்தினால் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

About the author

Web Writer

Leave a Comment