உள்நாட்டு செய்திகள் கல்வி பிராந்திய செய்திகள்

ஹொரகொட அல்ஹுதா பாடசாலை கட்டிட திறப்பு விழா

Written by Web Writer
Najeeb Deen Foundation அமைப்பின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாசிகசாலை மற்றும் கணணி அலகுப் பிரிவுடன் கூடிய கட்டிட திறப்புவிழா கடந்த 2018.09.30 அன்று ஹொரகொட அல்ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அல்ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் M.N.M. நிஸ்தார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்பிரதம அதிதியாக Najeeb Deen Foundation தலைவர் (இயக்குனர்) தேசமான்ய நஜீப்தீன் அவர்களும் விசேட அதிதியாக தென் மாகாண தமிழ் மொழி கல்விப்பணிப்பாளர் மதனியா கலீல் அவர்களும் கலந்துகொண்டனர்.

அதிதிகளாக ஒய்வு பெற்ற முன்னால் அதிபர் ஜெய்ன்லாப்தீன் மற்றும் ஒய்வு பெற்ற முன்னால் ஆசிரியர் அல்ஹாஜ் M.H.M மஷூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்சிகளும் அரங்கேறியது. இவ்விழாவில் Najeeb Deen Fountain அங்கத்தவர்கள், பாடசலை மாணவர்கள் பெற்றோர், ஊர் நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

-இப்னு ஆசாத்

About the author

Web Writer

Leave a Comment