அரசியல் உள்நாட்டு செய்திகள் சமூகம்

திகன வன்முறைகள் தொடர்பில் சுயாதீன அறிக்கை வெளியீடு

Written by Administrator

திகன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பொதுஜன கமிஷன் ஒன்று அறிக்கை தயாரித்துள்ளது. கண்டி மதங்களுக்கிடையிலான கமிட்டி (Kandy Inter Religious Committee) தயாரித்துள்ள இந்த அறிக்கை வெள்ளிக்கிழமை (23) கண்டி புஷ்பதான அரங்கில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது என இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி ஜயவீர தெரிவித்தார்.

திகன வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கோ, அறிக்கையிடுவதற்கோ அரச தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படாத நிலையிலும் எந்த ஜனாதிபதிக் கமிஷனும் நியமிக்கப்படாத நிலையிலும் தமது அமைப்பு பொதுஜன கமிஷனொன்றை நியமித்து இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது. பொதுமக்களிடம் இருந்தும் களத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொண்ட தகவல்களின் படி இந்தத் தாக்குதல்களை பொலிசார் தடுத்து நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகத் தெரிகிறது. இவை அனைத்தும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தரணிகள் மற்றும் பல புத்திஜீவிகள் இந்தக் கமிஷனில் அடங்கியிருக்கின்றார்கள் எனவும் காமினி ஜயவீர தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment