உள்நாட்டு செய்திகள் பிராந்திய செய்திகள் விளையாட்டு செய்திகள்

மாளிகாவத்தை N.M.W.A அஹதிய்யாவின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Written by Web Writer

மாளிகாவத்தை தேசிய முஸ்லிம் நற்பணியக இயக்க ஞாயிறு சன்மார்க்க அஹதிய்யா பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள founders கிண்ண கிரிக்கட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு 14 சென் ஜோஸப் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கல்வித்துறையில் மாத்திரமன்றி விளையாட்டு துறையிலும் மாணவர்கள், தமது திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலேயே வருடாந்தம் இவ்வாறான விளையாட்டு போட்டிகள் அஹதிய்யாவினால் நடாத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், N.M.W.A அஹதிய்யா பாடசாலை 2014ம் ஆண்டில் நடைபெற்ற president கிண்ண கிரிக்கட் போட்டியில் champion கிண்ணத்தையும், 2016ம் ஆண்டில் இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு: Ifthikaz Thaha : 0777 892 777 | Aflal Hisham : 0777 464 772 | Zaneer Ahmed : 077 945 6521

About the author

Web Writer

Leave a Comment