உலக செய்திகள் சர்வதேசம்

அல் அஸ்ஹர் பிரதான இமாமுக்கும் ஸிஸிக்குமிடையில் பாரிய கருத்து வேறுபாடு

Written by Administrator

அல் அஸ்ஹரின் பிரதான இமாம் அஹ்மத் அத்தையிப் மற்றும் எகிப்தின் இராணுவ ஆட்சியாளர் ஸீஸிக்கும் இடையில் பாரிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையொன்றில் எங்களை வதை செய்த இஸ்லாமிய சட்டஅறிஞர் என்ற தலைப்பிலான ஸீஸியின் அறிக்கையொன்று வெளிவந்துள்ளது.

அதேவேளை, இதே சஞ்சிகையில் ‘ஜனாதி பதியின் கண்ணோட்டத்தில் இஸ்லாமிய சட்டவியல்’ எனும் தலைப்பிலும் ‘சீர்திருத்த வாதி’ எனும் தலைப்பிலும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

அல் அஸ்ஹரின் பிரதான முப்தி அஹ்மத் அல் தையிப் ஸீஸியின் பிரதான ஆதரவாளர்களில் ஒருவர். தற்போது ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. கெய்ரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகமே இஸ்லாமிய உலகிலுள்ள மிகப் பெரும் பல்கலைக்கழகமாகும். அது இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பரப்புவதாக இராணுவக் கொடுங்கோலர் எனக் கருதப்படும் ஸீஸி குற்றம் சுமத்தியுள்ளார்.

About the author

Administrator

Leave a Comment