Features அரசியல்

அதிகார மோகத்தாலும் சந்தர்ப்பவாதத்தாலும் சிதைந்து போகும் தேசம்

Written by Administrator

 – மாலிக் பத்ரி –

பிரான்ஸின் பிரபல அரசியல் தத்துவஞானியும் கட்டுடைப்புவாதியுமான ழாக் தெரிதா ஒரு முறை சொன்னது போல், “ஜனநாயகம் வந்து விட்ட ஒன்றல்ல. அது எப்போதும் வர வேண்டிய ஒன்றாகவே உள்ளது.”

இலங்கையில் இன்று நடப்பதென்ன என்ற கேள்வி நாட்டுப் பற்றும் மனச்சாட்சியுமுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது. மனச்சாட்சியற்ற அரசியல்வாதிகளுக்கு இது எந்த உறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. அதிகார விளையாட்டில் ஊறித் திளைத்தவர்கள், தமது தனிப்பட்ட உல்லாசபுரிகளில் ஒய்யாரமாக இருந்து கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். மைத்ரியோ மஹிந்தவோ ரணிலோ ஏன் அனுரகுமாரவோ கூட இதற்கு விதிவிலக்கில்லை.

பாராளுமன்றத்தில் நடந்த கழைக் கூத்தாடித்தனத்தைத் தொடர்ந்து முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் குழப்ப நிலை ஒன்றுக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு நிபுணர்களுக்குக் கூட தலைசுற்று ஏற்படும் அளவுக்கு நெருக்கடி எல்லை கடக்கின்றது.

இந்தத் திரிசங்கு நிலையில் நடுத்தர வர்க்கமும் அடித்தட்டு மக்களும் மிகப் பெரிய பொருளாதார சுமைகளையும் ஜீவனோபாயப் போராட்டத்தையும் எதிர்கொண்டுள்ளனர். இதுதான் இந்த அரசியல் நெருக்கடியில் எதிர்பார்க்கப்பட்ட இறுதி விளைவாகும். டொலருக் கெதிரான ரூபாயின் பெறுமதி 180 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்காக அமெரிக்கா வழங்கவிருந்த பல பில்லியன் டொலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்குவதாக வாக்களித்திருந்த பெருந்தொகை நிதியை ரத்துச் செய்துள்ளன. மேற்கு நாடுகள் பல இலங்கைக்குச் செல்வதையிட்டு தமது பிரஜைகளை எச்சரித்துள்ளதனால் உல்லாசப் பயணிகளின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, அந்நியச் செலாவணியின் அளவும் குறைந்துள்ளது.

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் மத்திய வங்கி பல மில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாக ஒரு தகவல். தெளிவான நாணயக் கொள்கை (Fiscal Policy) இல்லாததனால் இலங்கை ரூபாய் மிதக்கும் நிலைக்கு வந்துள்ளது. பாடசாலை செல்லும் பிள்ளகைளுக்கான சீருடைத் துணி குறித்து எந்தக் கல்வியமைச்சும் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிக்கவில்ல. பாடசாலைகளுக்கோ விடுமுறை வழங்கப்பட்டு விட்டது.

தலைநகரிலுள்ள பிரபல்யப் பாடசாலைகள் சில கால்வாசி பாடப் புத்தகங்களை கல்வியமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சென்று பணம் செலுத்தி வாங்குமாறு பெற்றோரைப் பணித்துள்ளன.

நாட்டில் ஓர் அரசாங்கம் உள்ளதா? அமைச்சரவை உள்ளதா? இப்போது பிரதமராக இருப்பது யார்? ஒக்டோபர் 26 இற்குப் பின்னரும் அலரி மாளிகையில் வீற்றிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவா? அல்லது விஜயராம வீதியில் தனது   வாசஸ்தலத்தில் வசிக்கும் மஹிந்த ராஜபக்ஷவா போன்ற குழப்பமான கேள்விகள் நீடிக்கவே செய்கின்றன.

பாராளுமன்றத்திற்கு ஆளும் அரச தரப்பு வருகை தராத ஒரே நாடு இலங்கை தானா? எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் வருவதும் புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை யைக் கொண்டு வருவதும் ஜனாதிபதி மாளிகையில் அமர்ந்திருக்கும் மைத்ரிபால அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தல் விடுப்ப தும், எல்லாவற்றுக்கும் காரணம் சபாநாயகர் கரு ஜயசூரியவே என்று அறிக்கை விடுவதுமாக நாடு அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றது.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஒக்டோபர் 26 இல் நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ போலிப் பிரதமர் (பொறு அகமெதி) எனவும் புதிய அமைச்சரவை சட்டவிரோதமானது எனவும் கூறி வருகின்றனர். நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக் கத் திராணியற்ற மஹிந்த தரப்பு பாராளு மன்றத்தைத் தொடர்ந்தும் பகிஷ்கரித்து வருகின்றது. தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு தன்னை முற்றாகவே மறைத்துக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்யும் தீக் கோழியின் கதை இது.

இதற்கிடையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எவ்விலை கொடுத்தா யினும் உறுதி செய்யலாம் என்ற வினோ தமான கற்பனையில் மஹிந்தவை பிரதமராக்கிய மைத்ரி, தற்போது பெரும்பான்மை இல்லாத ஒருவரைக் கூட பிரதமராக நியமிக்கும் அதிகாரம் தனக்குள்ளது என்று புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

தனது அத்தனை அரசியல் தவறு களையும் அரசியலமைப்பின் சரத்துக்கள் மூலம் நியாயப்படுத்தி வரும் சிறிசேனா, இப்படியே ஒன்னுகக்குப் பின் ஒன்றாகக் கதையளப்பதற்கு அவரை சூழவிருக்கும் ஆலோசகர்கள்தான் காரரைணம் என்கிறார் ஓர் அரசியல் ஆய்வாளர்.

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஒரு சக்கரம் போல் சூழல்களிறது. ஒரு சங்கி போல் முடி வின்றி நீழ்கிறது. ஏதோ ஒரு இடத்தில் உடைப்பு ஏற்படாவிட்டால் நெருக் கடியை யாராலும் நீக்க முடியாது. ஏதோ ஒரு கண்ணி இங்கு உடைபட வேண் டும். இல்லையென்றால் நாடு முழு மொத்த அரசியல் ஸ்திரமின்மைக்குள் அமிழ்ந்து விடும்

1978 இல் திருவாளர் ஜூனியர் ரிச்சர் ஜயவர்தன எனப்படும் மாபெரும் மூளைசாலியான, அதாவது ஐ.தே.க.வின் அப்போதைய தலைவரால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதி பதி முறைமை இன்று அதே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக திரும்பியுள்ள மைதான் மிகப் பெரும் சோகம்.

பிரபல இடதுசாரியும் பொருளியல் துறை கலாநிதியுமான ஈணூ. என்.எம். பெரேரா, ஒற்றை மனிதனிடம் இத்துணை அதிகாரங்களைக் குவிக்கும் நிறைவேற்று முறை குறித்து ஜே.ஆர். இடம் அப்போதே எச்சரித்திருந்ததார். என்.எம். பெரேராவின் எதிர்வுகூறல் மைத்திரியினால் நிரூபிக்கப்பட்டு விட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அரசிய லமைப்பை “பஹ்பூத்தா விஸ்தாவ” என்றுதான் வர்ணித்தார். ஆட்சிக்கு வந்ததும் தமது முதற்பணி இந்த அரசியலமைப்பை மாற்றுவதுதான் என்று முழங்கினார். அவரால் வேட்பா ளராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியாகிய மஹிந்த இதே வாக்குறுயுடன்தான் அதிகாரக் கட்டிலில் அமர்நச்தாரர். ஆனால், ஜேஆர்.ஐ விடவும் நிறை வேற்று ஜனாதிபதி முறைமையின் தெவிட்டாத ருசியை சுவைத்துத் திழைத்தவர் அவர்தான்.

இம்முறை ஒரு சாபக் கேடு. நாட்டை ஒற்றை மனிதனிடம் கையளிக்கும் பைத்தியக்காரத்தனம் என்று சமூக நீதிக் கான இயகத்தின் தலைவர் மாதுலுவாவே சோபிதத தேரரர் 2014 இல் சிவில் அணி திரட்டலில் ஈடுபட்டார். அப்போது மஹிந்தவின் ஆட்சி உச்சத்திலிருந்தது. அது சர்வதிகாரம் என்று அனைத்துக் கட்சிகளாலும் வர்ணிக்கப்பட்டது. அதற்குக் காரணம் நிறைவேற்று அதிகார முறைதான் என்று கூறப்பட்டது.

2015 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இம்முறையை ஒழிப்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருளாக இருந்தது. புதிய ஜனாதிபதி பதவி யேற்று 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட்டு விடும் என்று மக்களின் வாக்குகள் தாரைவார்க் கப்பட்டன. பொது வேட்பாளர் தேவைப்பட்டபோது மஹிந்தவுடன் இருந்து அப்பம் தின்று கொண்டிருந்த முன்னாள் கிராம சேவை உத்தியோகத் தரும் பின்னாள் சுகாதார அமைச்சருமான மைத்ரி இந்தப் பக்கம் தாவினார். சந்தர்ப் பவாதம் இங்கிருந்தே தொடங்கியது.

2014 நவம்பர் 26 இல் இலங்கை மக்களையே ஒருமுறை அதிர்ச்சியில் உறைய வைத்தார் மைத்ரி. காரணம், பல தசாப்த கால சுதந்திரக் கட்சியுட னான தொப்புள் கொடி உறவை துண்டித்துக் கொண்டு இந்தப் பக்கம் தாவுவார் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குக ளோடு சிறிசேன ஜனாதிபதியானார்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. நான்கரை ஆண்டுக்கு முன்பாக பாராளு மன்றம் கலைக்கப்பட மாட்டது என     சட்டம் நிறைவேறியது. ஆனால் நிறை வேற்று அதிகாரம் குறித்த வாக்குறுதி கள் காற்றில் பறந்தன. மாதுலுவாவே சோபித தேரரின் கனவு அவரது சடலத் தோடு புதைகுழிக்குப் போனது.

ஆர். பிரேதமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த, மைத்ரி ஆகிய நான்கு பேரும் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்போம் என்ற வாக்குறுதியோடு தான் அதிகாரத்திற்கு வந்தனர். அதிகாரம் கைக்குக் கிடைத்த பின்னர் அவர்களுக்கு ஏற்ட்ட ஞாபக மறதி ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.

1978 அரசியலமைப்பு இலங்கையை ஒரு ஜனநாயக சோசலிஸக் குடியரசாக தக்கவைப்பதற்கான பொறியா அல்லது மறைமுக மன்னராட்சியை தக்கவைப்ப தற்கான பொறியா என்பதே இப்போது நம்மிடையே மீள மீள எழும் கேள்வியாகும்.

ஒக்டோபர் 26 இல் மைத்ரி எடுத்த சடுதியான தீர்மானம் நாட்டில் ஒன்றன் பின் ஒன்றான குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றம் இல்லை. அமைச்சரவை இல்லை. தேர்தலும் இல்லை. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இல்லை. இப்படி நாடு திரிசங்கு நிலைக்குள் திணறி வருகின்றது.

அரசியல் தவறுகளை நியாயப்படுத்த ஜனாதிபதி அரசியலமைப்பில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களிலும் ஆய்வி லும் ஈடுபட்டுள்ளார். புதிய பிரதமர் கூட உலக நாடுகளின் அரசியல் அமைப்புக்களை ஒப்பீட்டாய்வு செய்யும் பேராசிரியராக மாறியுள்ளார்.

70 வயதை எட்டியுள்ள, 70 வயதைக் கடந்த இம்மூன்று தலைவர்களும் நமது தாய்நாட்டின் அடுதத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்து எந்த அக்கறையும் இன்றியே செயல்படுகிறார்கள் என்பதை அவர்களின் ஒவ்வொரு நகர்வும் நிரூபித்து வருகின்றன.

ஐம்பதிலும் ஆசை வரும் என்பது போல் எழுவதிலும் அதிகார மோகம் வரும் என்பதைத்தான் இவர்கள் நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் யோக்கியதை உள்ள அரசியல் தலை வர்கள் எவரும் இல்லை என்பதும், சந்தர்ப்பவாதங்களும் சுயநலமுமே இலங்கை எனும் அழகிய பவளத் தீவை பாதாளத்தை நோக்கி நகர்த்தி வருகின்றது என்பதும் வெள்ளிடை மலை.

இந்த அரசியல் பாவத்திற்கு பிராயச் சித்தம் தேட வேண்டிய ஜயவர்த்தன உயிரோடு இல்லை. பாராளுமன்றமே மக்களின் இறைமையை பிரபலிப்பதாக ரணிலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமே மக்களின் இறைமையைப் பிரதிபலிப்பதாக மஹிந்தவும் மக்கள் நலன் குறித்துப் பேச வெளிக்கிட்டிருப் பதுதான் விநோதமாகும்.

உண்மையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எனும் தனிநபரை விட மக்களின் 225 பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமே மக்களின் பிரதிநிதிகள் சபையாகும். அதுவே மக்களின் இறைமையை உண்மையில் பிரதிபலிக்கின்றது.

ஒற்றை மனிதரின் தீர்மானத்தை விட 225 பேரில் பெரும்பான்மையினரின் தீர்மானம் முக்கியமானது. அதுவே ஜனநாயகத்திற்கு அமைவானது. ஜனாதிபதியும் மக்களால் தெரிவுசெய்யப் பட்ட ஒற்றைப் பிரதிநிதியே. அவர் பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை யினரை புறந்தள்ளிவிட்டு அவர்களின் கருத்துக்களுக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொள்வது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்று முறை கொண்டு வரப்பட்டும் அதை ஏற்கமுடியாது என்று அறிக்கை விடுவது தெட்டத் தெளிவான ஜனநாயகப் படுகொலையாகும்.

நாடு இன்று எதிர்கொண்டுள்ள அத்தனை அரசியல் நெருக்கடிக்குமான முழுப் பொறுப்பும் ஜனாதிபதிக்கு உள்ளது. அதேபோன்று ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு வழங்கும் அதிகாரம் ஜனநாயகத்தைக் கேலித்கூத்தாகியுள்ளது. இன்றைய இலங்கையின் அரசியல் ஸ்ரமின்மையின் விதைகள் ஜே.ஆர்.ரின் அரசியலமைப்பிலேதான் ஊன்றப் பட்டுள்ளன.

மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றாத இந்த அரசியலமைப்பு குறித்த சோபித தேரரின் கனவு நனவாக வேண்டும். இல்லையெனில், இலங்கைக்கு விடிவு கிடையாது. ஜனநாயகத்திற்கு அர்த்தமும் கிடைக்காது. இலங்கை மோசமான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தைக் கடந்து  செல்கின்றது. நமது அரசியல் வரலாற் றில் என்றென்றைக்குமான சாபமாக இருக்கும் ஜனாதிபதி நிறைவேற்று முறைமையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஐ இறுதியில் வரலாறு கேவல மாகப் பழிதீர்த்ததை நாம் அறிவோம். ஜே.ஆர்.இன் மறைவை யாரும் மிகப் பெரிய இழப்பாகப் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் அவர் மீதிருந்த மக்கள் வெறுப்புதான்.

சந்திரிக்கா வர்ணித்த அந்த ‘பஹ்பூத்தா வியாவஸ்தாவ’வின் சிற்பி அவர்தான். ஆனால், அதை துஷ்பிரயோகம் செய்யும் வரலாற்றுத் தவறை இன்னொரு தலைவர் இழைத்துவிடக் கூடாது என்பதே மக்களின் பணிவான வேண்டுகோளாகும்.

ஜேவிபி மாத்திரமே இன்று நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கும் ஒரே கட்சி. அது ஒழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் ழாக் தெரிதா சொல்வது போல் ஜனநாயகம் வந்து விட்ட ஒன்றல்ல. அது எப்போதும் இலங்கை மக்களுக்கு வரவேண்டிய ஒன்றாகவே இருந்து விடும்.

வாழ்க ஜே.ஆர்.! வாழ்க சிறிசேன! வாழ்க ஜனநாயகம்.

About the author

Administrator

Leave a Comment