Features சமூகம்

திகன வன்முறை: உண்மையை கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழு அறிக்கை மீதான ஒரு பார்வை

Written by Administrator

 – ஹெட்டி ரம்ஸி –

2018 மார்ச் மாதம் திகன, தெல்தெனிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவன் முறைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழு மற்றும் 2018.05.03 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற எதிர்காலத்தில் இனவன் முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசணை தொடர்பான பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த நவம்பர் 03 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவ்வாணைக்குழு கண்டி மாவட்ட சர்வமதக் குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்டது. கண்டி திகன வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து நேரடி வாக்குமூலங்கள் இவ்வாணைக்குழுவினால் பெறப்பட்டுள்ளது. இவ்வறிக்கை சம்பந்தமாக சகல பொறுப்புக்களையும் கண்டி மாவட்ட சர்வமதக் குழு பொறுப் பேற்றுள்ளது. கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பெரும்பாலான மக்கள் இவ்வாணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

வன்முறைச் சம்பவங்கள் குறித்த சி.சி.டி.வி வீடியோ பதிவுகளையும் இக்குழு தம்வசம் வைத்துள்ளது. திகன வன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின்  வாக்குமூலங்களை உள்ளடக்கிய வகையில் வெளியிடப்பட்ட மிக முக்கிய அறிக்கையொன்றாக இதனை நோக்க முடிகிறது.

கண்டி மாவட்ட சர்வமதக் குழு

கண்டி மாவட்ட சர்வமதக் குழு தேசிய சமாதானப் பேரவையின் கீழ் இயங்கி வருகின்றது. சர்வமதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட 40 இற்கும் மேற்பட்டவர் களை இக்குழு கொண்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையில் சமாதா னம், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே இக்குழுவின் நோக்காகக் காணப்படுகிறது.

கண்டி மாவட்ட சர்வமதக் குழு அப்பகுதியில் வாழும் சகல இன மக்களினதும் கலாசாரம், பல்வகைமைக்கு மதிப்பளித்துச் செயற்படுகிறது. கண்டி, திகன கலவரம் இடம்பெற்றபோது இக்குழு உடனடியாக முன்வந்து ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் போன்றவற்றுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இச்சம்பவத்திற்கு மறுதினம் சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களைப் பார்வையிட்ட கண்டி மாவட்ட சர்வ மதக் குழு, சேதமடைந்த பிரதேசங்களை புகைப்படம் எடுத்தும் வீடியோ பதிவுசெய்து கொண்டது. இதன்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் சம்பவத்தை பற்றிய தங்களது கருத்துக்களை சர்வமதக் குழுவினை பிரதிநிதித்துவப்படுத்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகளும் இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை இப்பிரச்சினையை உடன் நிறுத்தும்படி முரண்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களிடம் இந்தக் குழு ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தது. இந்த ஊடகக் கலந்துரையாடலானது திகன சம்பவம் தொடர்பாக சகல அமைப்புக்களைச் சார்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட ஒரேயொரு ஊடகக் கலந்துரையாடலாகக் காணப்பட்டது. அத்துடன் தொடர்ச்சியாக 06 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடிய இக்குழுவினர் நிகழ்வு பற்றிய தகவல்களை திரட்டி வந்தது. தவிரவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளையும் வழங்கி வந்தது.

உண்மையை கண்டறியும் ஆணைக் குழுவை நடைமுறைப்படுத்தல்

கண்டி மாவட்ட சர்வமதக் குழு 2018.05.02 ஆம் திகதி பத்திரிகை விளம்பரத்தின் படி செயற்படுவதற்கு ஆரம்பித்தது. இதன் பிரகாரம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் மூன்று நியமிக்கப்பட்டன. திகனயில் மூன்று இடங்களில் செயற்பட்டதுடன், 2018.04.28 ஆம் திகதி கடுகஸ்தொட, உகுரஸ்ஸபிடிய மற்றும் திகன பிரதேசங் களில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு செயற்பட்டது. 2018.05.02 ஆம் திகதி வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரத்தின் படி ஆணைக்குழுவில் செயற்படுவது சம்பந்தமாக சுயேச்சையாக பங்கு பற்றிய சட்டத்தரணிகள் குழு மூன்று பிரிவுகளாக பிரிந்து அந்தந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு உதவி செய்தனர். இவ்வாணைக்குழுவில் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகள் மூலம் சாட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அதனை நேரில் பார்த்தவர்கள் என பெருமளவிலானவர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தி ருக்கிறார்கள்.

ஆணைக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பதிவுசெய்துள்ளார்கள். உண்மையைக் கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழு வின் நடவடிக்கைகள் கட்டுகஸ்தொட,  உகுரஸ்ஸபிடிய, திகன ஆகிய இடங்க ளில் செயற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இனப்பிரச்சினையை இல்லாமல் செய்வதற்காக பிரஜைகள் ஆணைக்குழுவொன்று செயற்படுத்தப் பட்டது. அதற்கமைய 2018 மே மாதம் 13 ஆம் திகதி கண்டி டெவோன் ஹோட்டலில் இன மோதல்களைக் குறைப்பது எனும் விடயத்தில் உரிய துறைகளில் இடம்பெற வேண்டிய மாற்றங்களை உள்ளடக்குவதற்கான உரிய பிரஜைகளின் முன்மொழிவுகளையும் ஆலோசணைகளையும் பெற்றுக் கொள் ளும் வேலைத்திட்டமொன்று இடம்பெற்றது. இதில் பகிரப்பட்ட கருத்துக்களும் முன்மொழிவுகளும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேசிய சமாதானக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா: தலைமைத்துவப் பிரச்சினையே இன்று எமது நாட்டின் முக்கிய பிரச்சினை. எமது நாட்டில் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சினையான நிலைமைகளின் போது தமது தலைமைத்துவத்தைக் காட்டுவதில்லை. அவை எடுத்துக்காட்டப்படுவதில்லை. எமது நாட்டில் பக்கச்சார்பான தலைமைத்துவமே உள்ளது. மக்களைப் பற்றிய நம்பிக்கை எமது நாட்டுத் தலைவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவத் துறை பீடாதிபதி மில்டன் ராஜரத்ன: இந்நாட்டில் மீண்டும் மதக் கலவரங்கள் ஏற்படாத வகையில் முன் மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு இவ்வாறான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவது மிகவும் பெறுமதியானது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுக்களை அமைப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இதனால் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். கண்டி பிரஜைகள் ஆணைக்குழுவை முன்னுதாரணமாக கொண்டு எமது நாட்டில் ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

கண்டி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஏ.எம்.எல்.பி. பொல்கொல்ல: எமது நாட்டில் நான்கு இனங்கள் உள்ளன. எமது நாட்டை ஏன் ஐக்கியப்படுத்தி அபிவிருத்தி செய்ய முடியாது. பிரஜைகள் என்ற வகையில் நாம் இதற்கு முன்வருவது மிகக் குறைவு. அரசாங்கத்திடமிருந்து நாம் இவ்வாறான வேலைத் திட்டங்களை எதிர்பார்க்கின் றோம். அரசியல்வாதிகள் தாம் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதற்கு இவ்வாறான நிலைமைகளைப் பாவிக்கும் நிலையேற்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை தூண்டி அந்தந்த இனத்தவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வ தற்காக இவ்வாறானவைகளை ஏற்படுத்திச் செல்லும் நிலைமையினையே நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. பிரஜை கள் என்ற வகையில் நாம் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் இந்நாடு அழிவுக்குட்படும் என்பது நிச்சயம்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.எம்.பீ.பி. வராவெவ: எமக் கிடையே சமாதானம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு சமூகத்தை உரு வாக்க வேண்டும். குரோதம், வைராக்கியம், பழிவாங்கல் மற்றும் கொலைசெய்யும் அரசியல் கட்சிகள் அற்ற சமூகமொன்றே அவசியம். திகனயில் ஏற்பட்ட கலவரத்தை ஐந்து நிமிடங்களில் தீர்த்துக் கொள்ளக்கூடிய நிலைமையிருந்தது. பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந் தால் 5 நிமிடங்களில் இப்பிரச்சினையை முடித்திருக்கலாம். திட்டமிடப்பட்ட குழுவினராலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிராமம் என்ற வகையில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் எவ்வித கோபதாபங்களும் இல்லை. அவரரவர் மொழிகளில் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வேறு பாடுகள் ஏற்படவில்லை.

சமத் கவிகார- வித்தியார்த்த வித்தியாலயம்: கண்டி, நல்லிணக்கம் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டது. சமயங்களுக்கிடையேயும் சரி இனங்களுக்கிடையேயும் சரி அது ஒன்றோடொன்று இணைவதன் மூலம் ஏற்படுகின்ற சமாதானம் இருக்கலாம். வளர்ந்தோருக்கிடையில் மட்டுமன்றி இளம் சமுதாயத்தினரிடையேயும் பாடசாலை மட்டத்திலும் இவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமாயின் அது எமது சமூகத்தை இதைவிட உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும்.

எஸ்.ஏ. விஜேபால- தங்கொல்ல- கண்டி: அனைத்து சமயங்களினதும் கலாச்சார அடையாளங்களை மதிக்க வேண்டும், நாட்டு மக்களுக்கு தமிழ்,  சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழி அறிவுகளை பெற்றுக்கொள்ள உரிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். பிரதேச ரீதியாக அனைத்து சமயத்தவர்களுக்கும் தேவையான பொருத்தமான செயலமர்வுகளை ஏற்படுத்த வேண்டும். திருமணங்களின் போது சமயக் கட்டுப்பாடுகளை திணிக்கக் கூடாது.

நாரம்பனாவே தம்மாலோக தேரர்: இந்த உலகம் சமயங்களால் மாத்திரம் இயங்குவதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சமயம் தான் தேவை யென்றில்லை. வேறுபல வேலைத் திட்டங்களும் உள்ளது. பௌத்தவர்கள் பன்சிலையும், முஸ்லிம்கள் குர்ஆனை யும், கிறிஸ்தவர்கள் பைபிளையும் பரிசீலனை செய்ய வேண்டும். இந்த சமயப் பாடங்களை தங்களது வாழ்க் கைக்கு உட்படுத்தி அதைப் பின்பற்ற வேண்டும். நாம் அவற்றில் உள்ளவற்றை செயற்படுத்தாமல் வெளியுலகிலுள்ளவைகளை செயற்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் சமயத் தலைவர்களை ஒன்றுபடுத்தும் திட்டமொன்றை செய்ய வேண்டும். நாம் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ வேண்டும்.

ஜயவீர கொஹம்பகே: சமய அடிப் படையிலிருந்து அரசியற் கட்சிகள் விடுபட வேண்டும், இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளுக்கு தண்ட னைச் சட்டக்கோவையில் கடுமையான தண்டனைகள் உள்ளடக்கப்பட வேண் டும், பாடசாலை பெயரிடும் போது சமய, இன அடிப்படையில் பெயரிடுவதை தவிர்த்தல் வேண்டும், ஊடகங்களில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சம்பந்தமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கின்ற போது இன, மதம் பாராது மனிதர்கள் என்ற அடிப்படையில் சிந்தித்து ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும்.

ஆர்.எஸ்.பி.பீ சேனாநாயக்க: பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் அனைத்துப் பிரஜைகளையும் இலங்கையர் என குறிப்பிடுதல் வேண்டும். (உதா: இலங்கைச் சிங்களவர், இலங்கைச் சோனகர்) 1ஆம் தரத்திலிருந்து 6ஆம் தரம் வரையுள்ள பாடசாலை பாடத்திட்டத்தில் சமூகக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் (வரலாறு, புவியியல், சமயம்) இணைந்ததாக தம்மைச் சூழவுள்ள சுற்றாடலில் வாழும் பல்வேறு மக்கள் குழுமங்கள் சம்பந்தமாக உரிய விளக்கங்கள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வரலாறு, கலாசார நிகழ்வுகள், நற்குணவியல்புகள், சமய உற்சவங்கள் போன்றவை தொடர்பான அடிப்படை விளக்கங்களை வழங்குவதன் மூலம் ஆரம்பமாக நல்லிணக்கத்தை அறிமுகப்படுத்துதல், ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி பாடசாலைகள் இல்லாமல் எல்லோரும் ஒரே பாடசாலைத் தொகுதியில் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்தல்,

பாடசாலைச் சீருடை ஒரே மாதிரி அமைதல், பண்டிகை விழாக்கள் கொண்டாட்டங்களின் போது ஏனைய சமயத்தினரையும் தொடர்புபடுத்திக் கொண்டு முடியுமான அளவு விழாக்களை கொண்டாடக்கூடிய ஒரு முறையை ஏற்பாடுசெய்தல், சகல இனத்தவர்களினாலும் தங்களது அடையாளத்திற்கு அமைய அணியும் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் தொடர்பாக அவைகள் வரலாறுகளுக்கும் நவீன சமூக அமைப் பிற்கும் இடையிலான பொருத்தப் பாட்டை கருத்திற் கொள்ளல், 100 வருட குடி விகிதாசார வளர்ச்சி தொடர்பாக தகவல் திட்டமொன்று அமைத்து அந்தந்த இனக்குழுக்களின் குடித் தொகை வளர்ச்சி தொடர்பாக தெளி வான கருத்துக்களை மக்களிடையே அறிமுகப்படுத்தி ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை அது சம்பந்தமாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளி யிடல், சந்தைப் போட்டியினை காரண மாக கொண்டு முஸ்லிம் சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருக்கும் போட்டிகளின் மீது பல்வேறுபட்ட பிரச்சினைகள் பரவு வதை தவிர்த்துக் கொள்ளல்.

இவ்வாறு இவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சகல ஆலோசனைகளும் பொதுமக்களின் கருத்துக்களாக உள்ளன. சிவில் பிரஜைகள் சிவில் சமூக நிறுவனங்கள் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பெற்றுக் கொடுத்த ஆலோ சனைகளும் காணப்படுகின்றன. எனவே இவ்வறிக்கையில் உள்ள விடயங்களை பொறுப்பு வாய்ந்தவர்களும் பாதுகாப்பு தரப்பும் கவனத்திற் கொண்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் பணியை மேற்கொள்வது கட்டாயக் கடமையாகும்.

இனிமேலும் இது போன்றதொரு நிகழ்வு இடம்பெறாமல் இருப்பதற்கு இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முன்மாதிரியாகக் கொள்ளப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த ஆவணத்தைப் பாதுகாக்கும் அதேவேளை சட்ட நடவடிக்கைகளுக்கான மிக முக்கிய ஆதாரமாகவும் கொள்ளப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

About the author

Administrator

Leave a Comment