Scholarship உள்நாட்டு செய்திகள் கலை மாணவர் பகுதி

இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகள்

Written by Web Writer

பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சிகளை அறிமுகம் செய்ய திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை அச்சக நிறுவகம், தொழிற் பயிற்சி, தொழில்நுட்ப பல்கலைக்கழகம், NIPM, NSPM, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை தேசிய பயிலுனர் மற்றும் பயிற்சி அபிவிருத்தி அதிகார சபை, ஜேர்மன் தொழில்நுட்பம் பயிற்சி நிறுவகம், சமுத்திரவியல் பல்கலைக்கழகம் போன்றன இரண்டாயிரத்திற்கும் அதிகமான சர்வதேச தரம் வாய்ந்த பாடநெறிகளுக்கான வாய்ப்புகளை வழங்கவுள்ளன.

இங்கு வழங்கப்படும் தொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்வதன் மூலம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் இலகுவான முறையில் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களைப் பெற, தொலைபேசி இலக்கம் : 011 2081808 இணையத்தள முகவரி www.youthjobs.lk

பேஸ்புக் TVET Sri Lanka என்ற பக்கத்தில் இருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

About the author

Web Writer

Leave a Comment