Features உலக செய்திகள் சர்வதேசம் பெண்கள்

உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி

Written by Administrator

உலகின் முதல் பல்கலைக்கழகமான அல் கரவைன் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் பாத்திமா அல் ஃபிஹ்ரி எனப்படும் அறிவுஜீவி ஆவார். இப் பல்கலைக்கழகம் சாதாரண கல்வி நிலையமாகவே தொடங்கப்பட்டது. அதில் பல்வேறு தத்துவஞானி களும், கல்விமான்களும் தமது கல்வியைப் பூர்த்தி செய்துள்ளனர்.

தூனிசியாவிலுள்ள கரவைன் பல்கலைக்கழகமே உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகமாகும். தூனிசியாவிலுள்ள கைரவான் நகரில் பிரசித்தி பெற்றிருந்த முஹம்மத் அல் ஃபிஹ்ரி அல் கைரவான் எனும் செல்வம் கொழித்த செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த ஒருவரே பாத்திமா அல் ஃபிஹ்ரி எனப்படும் உயிர்த்துடிப்புள்ள பெண்.

கைரவான் நகரம் கி.பி. 670 இல் உமையா  வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது. 1300 ஆண்டு களுக்கு முன்னர் கரவைன் இஸ்லாமிய புலமைத் துவம், கலாசாரம், மற்றும் நாகரிகம் என்பவற்றின் தலைநகராய் விளங்கியது. பள்ளிவாயலை ஒட்டியே இக்கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கரவைன் நகரம் தற்போது யுனெஸ்கோவினால் உலக மரபுரிமை நகராகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கரவைன் அப்பாஸியக் கலீபாக்களால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்கள் ஆபிரிக்காவுக்கு அமைதியைக் கொண்டு வந்து சிசிலியை வெற்றி கொண்டார்கள்.

பாத்திமா அல் ஃபிஹ்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. இத்ரீஸிகளினுடைய தலைநகராய் விளங்கிய பாஸ் நகரின் குடிமக்களாக பாத்திமா ஃபிஹ்ரியின் குடும்பம் இருந்தது. 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கரவைனிலிருந்து பாத்திமா ஃபிஹ்ரியின் குடும்பம் பாஸுக்கு புலம்பெயர்ந்தது.

கரவைனில் இஸ்லாமிய பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதில் பாத்திமா ஃபிஹ்ரி அவரது குடும்பத் தின் சொத்துக்களை பெருமளவு செலவு செய்தார். பிரமாண்டமான கட்டங்கள், விசாலமான வீதிகளோடு உருவாக்கப்பட்டன. கரவைன் பல்கலைக்கழகம் ஒரு கோட்டை போன்று 14 வாயில்களைக் கொண்டிருந்தன.

இப்பல்கலைக்கழகத்தில் பாத்திமா ஃபிஹ்ரியின் கணவரும் தந்தையும் சகோதர்களும் மரணித்ததன் பின்னர் அவருக்கும் அவரது சகோதரி மர்யத்திற்கும் பெருந்தொகை செல்வம் வாரிசுரிமையாகக் கிடைத் தது. அவர்கள் இருவரும் சிறந்த கல்விமான்கள். இத னால் தமது முழுச் சொத்துக்களையும் முஸ்லிம்களின் கல்விப் பணிக்காக ஒதுக்குவதற்குத் தீர்மானித்தனர்.

பாஸிலுள்ள பள்ளிவாயல்கள் போதுமான இட வசதியற்றவை என்பதை உணர்ந்த அவர்கள் கி.பி. 859 இல் பாஸிலும் கரவைனிலும் அந்தலூசியாவிலும் பல பள்ளிகளை நிர்மாணித்தனர். இவ்விடயத்தில் மர்யம் அவர்களின் சொத்துக்கள் பெருமளவு பயன் பட்டன. பாத்திமா அல் ஃபிஹ்ரி தூனிசியாவில் அல் கரவைன் பள்ளிவாயலையும் பல்கலைக்கழகத்தையும் நிர்மாணித்தார்.

பெரும்பான்மையான உலக வரலாற்றாசிரியர் களின் கருத்தில் அல் கரவைன் பல்கலைக்கழகமே உலகில் தோன்றிய கலைமானிப் பட்டம் வழங்கிய முதல் பல்கலைக்கழகமாகும். இப்பலைக்கழகத்தில் நிர்மாணப் பணிகளில் பாத்திமா அல் ஃபிஹ்ரி மேற்பார்வை செய்துள்ளார். கலைத் திட்டத்தை வடிவமைப்பதிலும் அவர் பங்களித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பல்கலைக்கழக நிர்மாணப் பணிகள் முடியும் வரை அதன் வெற்றிக்காக ஒவ்வொரு நாளும் தொழுகையிலும் பிரார்த்தனையிலும் அவர் ஈடு பட்டதாக வரலாற்றில் அறியப்படுகின்றது. வட ஆபிரிக்காவிலுள்ள மிகப் பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அல் கரவைன் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டது.

அபுல் அப்பாஸ் மற்றும் முஹம்மத் அல் பாஸி போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் புகஹாக்களும் கரவைன் பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற சூபி மற்றும் பகீஹ் எனக் கருதப்படும் இப்னு அல் அறபி, வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான இப்னு கல்தூன், புவியியலாளரான முஹம்மத் அல் இத்ரீஸி, வானியலாளரான நுருத்தீன் அல் பித்ரூஜி போன்றோர் அல் கரவைன் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள்.

ஆரம்பத்தில் அல்குர்ஆனும் இஸ்லாமிய சட்ட மும் போதிக்கப்பட்டன. பின்னர் கணிதம், அறபு மொழி, மருத்துவம், வானியல், இயற்பியல், வரலாறு, புவியியல் பாடங்களை முஸ்லிம் மாண வர்கள் மட்டுமன்றி, கிறிஸ்தவ யூத மாணவர்களும் பயின்றனர்.

முழுப் பல்கலைக்கழகக் கல்வியும் பாத்திமா அல் ஃபிஹ்ரியின் அனுசரணையில் இலவசமாக வழங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இன்றும் இயங்குகின்றது.

About the author

Administrator

2 Comments

  • Kindly include the names of great places and people in English as well to avoid confusions among readers. Tamil translations of names, most of the times, do not represent the real names.

Leave a Comment