அஷ்ஷெய்க் றவூப்ஸெய்ன் கல்வித்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றார்

51

பிரபல ஆய்வாளரும் எழுத்தாளரும் கல்வியியலாளரும் பன் நூலாசிரியருமான அஷ்ஷெய்க் றவூப்ஸெய்ன் ( நளீமி) கல்வித்துறையில் 
கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார். தென் அமெரிக்காவின் கொஸ்டா ரிகா வெலி ( University of the Valley) பல்கலைக் கழகத்தில் கல்வித்துறை ஆய்வுக்காக அதியுயர் தரப்புள்ளிகளைப் (GPA) பெற்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீள்பார்வைப் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான இவர் கல்விப் பரப்பில் விரிவுரையாளராக, ஆய்வாளராக, பாட வரைஞராக, கல்வி வழிகாட்டுனராக, உயர் கல்வி ஆலோசகர் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக இயங்கி வருபவர். இதுவரை கல்வித்துறை சார்ந்த 12 ஆய்வு நூல் அடங்கலாக மொத்தம் 44 நூல்களை எழுதியுள்ளார்.

வட மாகாணம் தவிர்த்த ஏனைய 20 மாவட்டங்களிலுள்ள சுமார் 200 பாடசாலைகளில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர், அதிபர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் வளவாளராகக் கலந்து கொண்டுள்ளார். இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்க் றவூப்ஸெய்ன் ஹவ்வா உம்மா முஹம்மத் ஸெய்ன் ஆகியோரின் ஆறாவது புதல்வராவார்.