பிராந்திய செய்திகள் பெண்கள்

அப்ரா இல்யாஸின் சிறகடிக்கும் நிலவு கவிதை நூல் வெளியீடு

Written by Administrator

கவிதாயினி சகோதரி அப்ரா இல்யாஸ் அவர்களின் சிறகடிக்கும் நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் இன்று 2018/12/28 மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இந் நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் MMM. நாஜிம் அவர்கள் கலந்துரையாடினர். மேலும் இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பீடாதிபதி . கலாநிதி SMM. மஸாஹிர் அவர்கள் கலந்துரையாட்டினர் . மேலும் இந்நிகழ்ச்சிக்கு கொளரவ விருந்தினராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிர்தெளஸ் சத்தார், கலாநிதி யோகராஜா, அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியை இலங்கை தென் கிழக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment