சமூகம்

ஸதகதுல்லாஹ் மௌலவிக்கு நஷ்டஈடு வேண்டும்

Written by Administrator

தீவிரவாதிகளின் திகன தாக்குதல்களின் போது படுகாயமடைந்த ஸதகதுல்லாஹ் மௌலவி கோமா நிலையில் இருந்து மரணமடைந்துள்ளார். திகன தாக்குதல்களின் போது தீவிரவாதி ஒருவரால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமையே இவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

திகன தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு 100,000 ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த வேளை உத்தரவிட்டிருந்தார். அதன்படி கொல்லப்பட்ட மூவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. அதில் பாஸித் மட்டுமே கலவரத்தில் கொல்லப்பட்டவர். அடுத்தவர் இரண்டு தனிநபர்களுக்கு இடையில் நடந்த தெருச் சண்டையில் கொல்லப்பட்டவர். அடுத்தவர் தாக்குதலுக்கு வந்த வேளையில் கொல்லப்பட்டவர். இருந்தாலும் அரசாங்கம் இவர்களையும் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களாகக் கருதி அவர்களுக்கும் நஷ்டஈட்டினை வழங்கி வைத்தது. இந்த வகையில் திகன தாக்குதல்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஸதகதுல்லாஹ் மௌலவிக்கும் உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  

About the author

Administrator

Leave a Comment