வெற்றிகளை ஊக்க மருந்துப் பாவனை கேள்விக்குள்ளாக்குகிறது

0
4

தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பாவித்து விளையாட்டில் வெற்றி பெறுகின்ற மோசமான கலாச்சாரம் தொடர்பில் இலங்கையும் தற்போது பேசப்படுவதனால், போட்டிகளில் வெற்றி பெறுகின்ற வீரர்கள் தொடர்பில் சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. அண்மைக் காலங்களில் இலங்கையின் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது வேகத்தைப் பதிவு செய்த காலிங்க குமாரகே ஊக்க மருந்துப் பாவனைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அண்மையில் நடந்த இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின்போது பெற்றுக் கொள்ளப்பட்ட சிறுநீர் மாதிரியைப் பரீட்சித்துப் பார்த்ததில் காலிங்க குமாரகே தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தினைப் பயன்படுத்தியமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு 4 வருட காலம் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் இந்தியாவில் 05 வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துப் பாவனையினால் போட்டித் தடைகளை எதிர்கொண்டிருந்தனர். விளையாட்டு வீரர்களுக்கு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை வழங்குவது தற்பொழுது பெரும் தொழிலாக முன்னெடுக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமது உண்மையான திறமைகளை வெளிக் கொணரவிருக்கும் பாடசாலை மட்ட விளையாட்டு வீரர்கள் இதனால் அடையப் போகும் பாதிப்பை முன்னிறுத்தி, இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும்படியான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here