Features ஆசிரியர் கருத்து

பிரச்சினையை நோக்கிய அடுத்த கட்ட நகர்வாக புதிய யாப்பு அமையக் கூடாது

Written by Administrator

Editorial | MP 411

பிரதமர் தலைமையிலான அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழு தமது அறிக்கையை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறது. இந்த அறிக்கையில் இது ஒரு வரைவு என நீர்க்குறி இடப்பட்டிருந்தாலும் இது ஒரு வரைவே அல்ல என அரசாங்கம் அழுத்தமாகக் கூறியிருக்கிறது. ஆனாலும் தனது தலைமையிலான வழிநடத்தல் குழு அதன் பணியைப் பூர்த்தி செய்துவிட்டதாகத் தெரிவுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சகல கட்சிகளினாலும் இணக்கப்பாட்டுக்கு வரக் கூடிய விடயங்களைத் தெரிவு செய்து கருத்தொருமிப்புக்கு வந்து அரசியலமைப்பு வரைவொன்றை அரசியலமைப்பு சபை தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை ருவாக்கப்பட்ட மூன்று அரசியல் யாப்புக்களும் இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தரவில்லை என்பதோடு, நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த வழிவகைகளையும் நடைமுறைப்படுத்தும் விதமாகவும் அமையவில்லை. மாற்றமாக நாட்டில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஏனைய சமூகங்களை ஒடுக்கும் வகையிலேயே யாப்புக்கள் வரையப்பட்டுள்ளன. அவ்வப்போது ஆட்சியில் இருக்கின்றவர்களின் தேவைக்கேற்ப வரையப்பட்ட யாப்புக்களாகவே முன்னைய மூன்று யாப்புக்களும் வரையப்பட்டிருந்தன.

குடியரசுக்கு முந்திய டீ.எஸ். சேனநாயக்கவின் சோல்பரி யாப்பு, இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையைப் பறித்தது. பண்டாரநாயக்கவின் முதலாவது குடியரசு யாப்பு சிங்களத்தை அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தி தமிழரின் மொழியுரிமையைப் பறித்தது. ஜே.ஆர் ஜயவர்தனவின் மூன்றாவது குடியரசு யாப்பை இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல தமிழரின் ரிமைப் போராட்டத்துக்கே காரணமாகி நாட்டை முப்பது வருட யுத்தத்துக்குள் கொண்டு போய்விட்டது. சுதந்திரம் கிடைத்து 70 வருடங்களின் பின்னர் தற்போது ருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அளவில் தீர்வைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தூரதிருஷ்டி இல்லாத இலங்கையின் அரசியல் தலைமைகள் நாட்டின் மொத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் வகையில் அன்றி, பிரச்சினைகளை இடம் மாற்றி ஒட்டுப் போடும் முயற்சியினையே புதிய அரசியல் யாப்பினூடாக முன்னெடுப்பதாகத் தெரிகிறது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வரையப்படுவதாகச் சொல்லி விட்டு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை கவனத்தில் எடுக்காமல் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தள்ளி வைத்திருக்கின்ற ஒரு நிலையையே அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள் தெளிவுபடுத்துகின்றன.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற பண்டாரநாயக்க காலத்து ஷரத்துகளே புதிய அரசியல் யாப்பிலும் உள்வாங்கப்பட்ட போதும், அது ஒட்டு மொத்த பௌத்த மக்களின் தேவையாகவன்றி பௌத்த தீவிரவாத அமைப்புக்களைத் திருப்திப்படுத்தும் விதமாகவே மீளவும் ள்வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த வகையில் பௌத்த தீவிரவாதிகளின் மேலாதிக்கம் நிலவுகின்ற ஒரு சூழலில் அரசியல் யாப்பைத் தயாரிப்பவர்கள் சூழ்நிலைகளின் கைதிகளாக இருந்து தான் தமது பணியை முடிப்பார்கள் என்பது தான் எதிர்பார்க்க முடியுமானது. பௌத்த மேலாதிக்கணர்வு தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏவப்பட்டுள்ளதனால் இந்தச் சூழலில் வரையப்படுகின்ற அரசியல் யாப்பு நிச்சயமாக பௌத்த மேலாதிக்கவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் முஸ்லிம்களுக்கு விரோதமானதாகவே வரையப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

நாடு அதற்கென உருவாக்கப்படுகின்ற யாப்பின் அடிப்படையிலேயே செயற்படும். அந்த வகையில் யாப்பின் மூலம் உறுதி செய்யப்படுபவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவ்வப்போது ஆட்சிக்கு வருகின்ற அரசியல் தலைமைகளுக்கு வால் பிடிப்பதன் தேவையானதைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற அடிமைத்தனமான சிந்தனையில் இருந்து விடுபட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் தேவைகளையும் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment