அரசியல்

போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்

Written by Administrator

போதைப் பொருட்களுக்கெதிராக சிறந்த முறையில் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) எம்.ஆர்.லதீப் பெப்ரவரி 01 ஆம் திகதியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பொலிஸ் திணைக்களத்தின் போதைப் பொருட்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கான பிரிவினை இவர் சிறந்த முறையில் செயல்படுத்தினார்.

பொலிஸின் விஷேட அதிரடிப் படைக்குப் பொறுப்பாக இருந்த இவர், போதைப் பொருள் வலைப்பின்னல்களை சுற்றி வளைப்பதிலும், பேர்பெற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

பொலிஸ் சேவையில் உள்ள சிறந்த அதிகாரிகளுள் ஒருவரான லதீபுடைய சேவைக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படும் அதே வேளை, ஜனாதிபதி சிரிசேன ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு உயர் பதவியொன்றை வழங்கவிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அலுவலக வேலையொன்றைப் பொறுப்பெடுப்பதில் லதீப் அக்கறை காட்டவில்லை எனவும் அவர் பெரும்பாலும் பெப்ரவரி 01 இல் விடைபெற்றுச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ரிரிஈ க்கு எதிரான பல நடவடிக்கைகளிலும் லதீப் முனைப்பாக ஈடுபட்டார். 1987 இல் புலிகளின் பெய்ரூத் முகாமை கொக்கட்டிச்சோலையில் அழித்தொழிப்பதிலும் லதீப் பெரும் பங்கு வகித்தார்.

About the author

Administrator

1 Comment

Leave a Comment