உலக செய்திகள் சர்வதேசம்

சிரியாவின் பாதுகாப்பு வலயங்கள் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் – அர்தூகான்

Written by Administrator

சிரியாவின் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நோக்கில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படும் என துருக்கிய ஜனாதிபதி தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார். ஸ்தன்பூலில் உரையாற்றிய ஜனாதிபதி, ஏற்கனவே 3 இலட்சம் சிரி யர்கள் வட சிரியாவில் துருக்கியின் கட் டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குத் திரும்பி யுள்ளதாகவும் உத்தேச பாதுகாப்பு வல யங்களுக்கு மேலும் பல மில்லியன் சிரிய அகதிகள் திரும்ப முடியும் என்றும் கூறினார்.

துருக்கி 4 மில்லியன் சிரிய அகதி களைப் பராமரித்து வருவது குறிப்பிடத் தக்கது. கடந்த மாதம் சிரியாவிலிருந்து 2000 துருப்புக்களை அமெரிக்கா மீளப் பெற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து 32 கி.மீ. அகலமான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அர்தூகான் அங்கு குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்கிடையில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு விடும். அவை அமெரிக்க ஆதரவளித்து வரும் சிரியாவின் குர்திஷ் பயங்கரவாதிகளின் ஊடுருவலிலிருந்து  முழுப் பாதுகாப்புப் பெறும் என அர்தூகான் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்து வரும் குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை மற்றும் ஐஎஸ் ஐஎஸ் என்பவற்றுக்கு எதிராக துருக்கி களத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. துருக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிலும் துருக்கி ஆதரவுப் படையிலுள்ள பிரதேசங்களிலும் அகதிகள் மீளக் குடியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

About the author

Administrator

Leave a Comment