உலக செய்திகள் சர்வதேசம்

மலேசியாவில் ஊழலை ஒழிப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்

Written by Administrator

மலேசியாவில் ஊழலை ஒழிப்பதற்கு அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அரச துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இத் திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று புதிய பிரதமர் மஹாதிர் முஹம்மத் கருத்து வெளியிட்டுள்ளார். முன்னைய அரசாங்கம் பல பில்லியன் டொலர் ஊழல் மோசடி குற்றச்சாட்டின் பெயரிலேயே பதவி கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் பிரதமர் மஹாதிர் முஹம்மதினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஊழல் மோசடி ஒழிப்புத் திட்டம் முக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதேவேளை, அமைச்சர்கள் தமது சொத்துக்களைப் பிரகடனம்  செய்ய வேண்டும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்பாகவே தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அதேவேளை, நிதி ஒதுக்கீடுகளைக் கண்காணிப்பதற்கான புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. கடந்த வருடம் மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட நஜீப் ரஸ்ஸாக் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருந்தமை நிறுவப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான பகுதி மலேசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து திருடப்பட்டுள்ளது. தற்போது நஜீபும் அவரது மனைவியும் முன்னாள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர்.

About the author

Administrator

Leave a Comment