உலக செய்திகள் சர்வதேசம்

முஸ்லிம்களின் சித்திரவதை முகாம்களை மூடுமாறு சீனாவுக்கு துருக்கி வேண்டுகோள்

Written by Administrator

சீன அரசாங்கம் சுமார் ஒரு மில்லி யன் முஸ்லிம்களை தடுப்பு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருவதாகவும், மனித குலத்திற்கு பெரும் வெட்கக் கேடு என்று துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கண்டித்துள்ளதோடு, சீன அரசாங்கம் இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஐரோப்பிய மற்றும் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சீனாவின் நிர்ப்பந்த மத மாற்றம் மற்றும் சித்தரவதைகள் குறித்து விசாரணை செய்வதற்கான ஐ.நா. ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் சீன அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளனர். நன்கு திட்டமிடப்பட்ட மத மாற்றம் மற்றும் மத நீக்க செயற்பாடுகளுக்கு இம்முஸ்லிம்கள் உட்படுத்தப்படுவதாக துருக்கியின் வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் ஹமீ அக்சொய் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உய்குர்முஸ்லிம்கள் இனத்தில் துருக் கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழுகை, நோன்பு, போன்ற மதக் கிரியைகளைக் கைவிடுமாறும் ஹபாயா, ஜுப்பா போன்ற ஆடைகள் அணியக் கூடாது என் றும் சீன அரசாங்கத்தினால் வற்புறுத்தப்படுகின்றனர். இலட்சக்கணக்கான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்குச் சொந்தமான பாலைவனமொன்றில் இளைஞர்களை விசாரிக்கும் விசாலமான சிறைச்சாலையும் தடுப்புக் காவல் முகாமும் இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது. தடுப்புக் காவல் மையத்தில் உய்குர் முஸ்லிம் சமூகத்தின் கவிஞர்களுள் ஒருவரான அப்துர் ரஹீம் கடந்த வாரம் கொல்லப்பட்டதை அடுத்து துருக்கி சீன அரசாங்கத்தை வெளிப்படையாகக் கண்டித்துள்ளது.

சீன அரசின் மீது பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதோடு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

About the author

Administrator

Leave a Comment