உள்நாட்டு செய்திகள்

ஐநாவுக்காக ஹெலிகளை வாங்குகிறது இலங்கை

Written by Administrator

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த இரண்டு இலங்கைப்படைவீரர்கள் மாலியில் உயிரிழந்த நிலையில் இந்த வேலைத்திட்டத்துக்கு வழங்கவென இலங்கை ரஷ்யாவிடமிருந்து ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. ரஷ்யாவின் Mi-17 ரக ஹெலிகொப்டர்களின் புதிய தொகுதியொன்றை வாங்கவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் துதுவர் கலாநிதி தயான் ஜயதிலக ரஷ்யாவின் ஸ்புட்னிக் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த வருடம் செப்டம்பரில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த அதிகாரிகளினால் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் எத்தனை ஹெலிகொப்டர்கள் வாங்கப்படவுள்ளன என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இரட்டை விசையாழிகளைக் (Twin turbine) கொண்ட இந்த Mi-17 ரக ஹெலிகொப்டர்களை இலங்கை 1990 ஆம் ஆண்டு முதலே வாங்கி வருகிறது.

இந்த ஹெலிகொப்டர்கள் பொதி மற்றும் பயணிகளைச் சுமக்கவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளிலும், பாதிக்கப்பட்டோரைத் தூக்கிச் செல்லவும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குமென பல வழிகளிலும் பயன்படுத்தப்பட முடியுமானவைகளாகும்.

About the author

Administrator

Leave a Comment