உள்நாட்டு செய்திகள்

மதுபான விற்பனையை இலகுபடுத்த நடவடிக்கை

Written by Administrator

மதுபான விற்பனை நிலையங்களுக்கு புதிதாக லைசன்ஸ் பெறவும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபானங்கள் விற்பதற்கான லைசனை புதுப்பிக்கவும் ஒன்லைன் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வைபவங்களுக்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள 7.5 லீட்டருக்கு மேலதிகமாக மதுபானத்தை வாங்குவதற்கும், கையிருப்பில் வைத்திருப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் தேவையான அனுமதியையும் இதனூடாக இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியுமாக அமையும்.

உலக வங்கி இதற்கென 75 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. அரசாங்கம் இதுவரை 5000 க்கும் மேற்பட்ட லைசன்ஸ்களை வழங்கியுள்ள போதும், மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரத்துக்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான நடைமுறையை இலகுவாக்கிக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment