Features சர்வதேசம்

உலக ஆயுத வணிகமும் சமாதானத்தின் காவலா்களும்

Written by Administrator

SIPRI இன் அறிக்கை மீது ஒரு பார்வை

அமைதிக்கும் சர்வதேச ஆய்வுக்குமான சுவீடன் நிறுவனம் வருடாந்தம் உலக ஆயுத வணிகம் மற்றும் சிவில் யுத்தங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை 2018 இல் வெளியிட்டது. அதன்படி உலகில் சுமார் 40 நாடுகளில் சிவில் யுத்தங்கள் நடை பெறு கின்றன. லத்தீன் அமெரிக்காவில் கொலம்பிய, ஈக்குவடோர், மெக்சிகோ, பராகுவே ஆகிய நான்கு நாடுகளிலும் பெரும் அரசியல் குழப்பங்களும் ஆயுத மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

ஆசியாவில் ஆப்கானிஸ்தான், இந்தியா, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பங்களாதேஷ், நேபால், சிரியா, எகிப்து (சினாய்), யெமன், ஈராக், பலஸ்தீன், துருக்கி (எல்லைப் புறம்) போன்றவற்றில் ஆயுத மோதல்கள் நடைபெறுகின்றன.

கண்டம் என்ற ரீதியில் ஆபிரிக்காவிலேயே அநேக நாடுகள் ஆயுத மோதலை எதிர்கொண் டுள்ளன. உப சஹாரா, லிபியா, சோமாலியா, எதியோபியா, மாலி, நைஜீரியா, மத்திய ஆபி ரிக்கக் குடியரசு, சூடான், கென்யா, லெசோதா, சிம்பாவே, புரூண்டி, கெமரூன், கொங்கோ ஜனநாயகக் குடியரசு போன்றன நீண்டகால ஆயுத மோதலில் சிக்குண்டுள்ளன.

ஐரோப்பாவில் ஆர்மேனியா, செச்னியா, ஜியோஜியா, சைபிரஸ், உக்ரைன் ஆகியவற்றில் ஆயுதக் குழுக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையில் தீவிர ஆயுத மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய ஆயுத மோதல்கள் அனைத்திலும் ஐந்து நாடுகளின் ஆயுதங்களே பயன்பாட்டில் உள்ளது என்று சிபிரி தனது அறிக்கையில் தெரிவிக்கின்றது. ஆயுதங்களையும் போர்களையும் பிற நாடுகளுக்கு இறக்குமதி செய்யும் வணிக நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், ரஷ்யா என்பன விளங்குகின்றன.

2017 இல் உலக இராணுவச் செலவீனம் 1739 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். பனிப் போருக்குப் பிந்திய தசாப்தங்களில் போர்களுக்கும் சிவில் யுத்தங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இராணுவ செல வீனம் இதுவே என்று சிபிரியின் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

2017 ஆம் ஆண்டின் உலக இராணுவத் துறை செலவீனங்களை பிராந்திய ரீதியில் சிபிரி பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் உலக சந்தையில் ஆகக் கூடியளவு ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளின் தர வரிசையும் பெருந்தொகை செலவீனத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் தர வரிசையும் சிபிரியின் அறிக்கையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாயுதக் கொடுக்கல் வாங்கல்களில் அணுவாயுதம், இரசாயன உயிரியல் ஆயுதங்கள் மற்றும் பாரம்பரிய ஆயுதங்கள் உள்ளடங்குகின்றன.

About the author

Administrator

Leave a Comment