உள்நாட்டு செய்திகள்

அரச ஊடகங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழ்

Written by Administrator

அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழிருந்த நிதி மற்றும் ஊடக அமைச்சுக்களில் ஊடக அமைச்சு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜெயவர்தனவின் கீழ் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சாகக் கொண்டுவரப்பட்டதையடுத்து புதிய ஊடக அமைச்சின் கீ்ழ் வரும் நிறுவனங்களை அரசாங்கம் விஷேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. பெப்ரவரி 22 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த விஷேட வர்த்தமானி அறிவித்தலின்படி, தகவல் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக் காட்சி சேவை (ITN), அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் (லேக்ஹவுஸ்) ஆகியன அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடக அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

About the author

Administrator

Leave a Comment