உள்நாட்டு செய்திகள்

அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள்

Written by Administrator

அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதினாலேயே மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த முகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனமே தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் வீதம் வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நம்பிக்கையீனம் தற்பொழுது அதிகரித்து வருகிறது. தேர்தலில் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்த பின்னர், அவர்கள் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்களின் இந்த எண்ணம் சரியானதல்ல. மக்கள் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் மக்களின் ஆணைப்படி நடந்து கொள்ளாவிட்டால், அரசியல்வாதிகளிடம் அது தொடர்பில் கேள்வி கேட்கும் நிலை வர வேண்டும். இப்படி ஒரு நிலைமை உருவாகுமாக இருந்தால் தான் மக்களிடம் தேர்தல் பற்றிய நம்பிக்கை வளரும் எனவும் அவர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment